நான் நல்ல நலமுடன் இருக்கிறேன்: சரத் பவார் டுவிட்டரில் தகவல் !
மும்பை: உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தாம் நல்ல நலமுடன் இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இறந்து விட்டதாக வைரலாக ஒரு செய்தி பரவியது.

மேலும் நாட்டின் 67 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டதைத் ஒட்டி இந்த தகவல் தெரிவிக்கப்படாமல் இருந்ததாகவும் வதந்தி பரவியது. இதையடுத்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் சுனில் தத்கரே நேற்று மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சரத் பவாருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக புணே மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நலமாக உள்ளார்.
மருத்துவமனையில் இருந்து புதன் அல்லது வியாழக்கிழமை வீடு திரும்புவார். பிறகு, அவர் வழக்கம்போல் தனது பணிகளை மேற்கொள்வார் என்றார் சுனில் தத்கரே
இதனிடையே, தான் நல்ல நலமுடன் இருப்பதாக சரத் பவார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில், "நான் நலமாக இருக்கிறேன். நீங்கள் (மக்கள்) செய்யும் பிரார்த்தனைகளுக்கு நன்றி' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
I am well and perfectly fine. Thank for your good wishes.
— Sharad Pawar (@PawarSpeaks) January 26, 2016 -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications