ஜெயலலிதாவின் அழகால் ஈர்க்கப்பட்டேன்.. மார்கண்டேய கட்ஜு சர்ச்சை கருத்து
டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது தனக்கு இளம் வயதில் ஈர்ப்பு இருந்ததாக சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
பாடல் வீடியோ இணைப்புடன் அவர் பதிவு செய்துள்ள இந்த பேஸ்புக் பதிவு வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலகட்டத்தில் ஒருமுறை இதேபோல ஒரு கருத்தை கட்ஜு கூறியிருந்தார். தற்போது மீண்டும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இளமை காலத்தில்
பேஸ்புக் பதிவில் கட்ஜு கூறியுள்ளதாவது: நான் இளமையாக இருந்தபோது, ஜெயலலிதா மீது ஈர்ப்பு இருந்தது. அவர் மிகவும் அழகானவர் என்று எண்ணியிருந்தேன். ஜெயலலிதாவு அதுகுறித்து தெரிந்திருக்க வாய்ப்பு இல்லைதான்.

சந்திப்பு
ஜெயலலிதா 1948ம் ஆண்டு பிப்ரவரியில் பிறந்தார். நான் 1946 செப்டம்பரில் பிறந்தேன். 2004 நவம்பர் மாதம்தான் முதன் முதலில் ஜெயலலிதாவை நான் சந்தித்தேன். நான் மெட்ராஸ் ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றபோது ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் பங்கேற்றார்.

பாடல் வீடியோ
அந்த வயதில் கூட ஜெயலலிதா அழகாகத்தான் இருந்தார். ஆனால், நான் இளமைக் காலங்களில் கண்ட கற்பனைகளை அவரிடம் சொல்லவில்லை. அது பொருத்தமற்றது என்பதை அறிந்திருந்தேன். இவ்வாறு கூறியுள்ள அவர் "பார்வை ஒன்றே போதுமே.." என்ற பாடல் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

சர்ச்சை கருத்துக்கள்
மார்கண்டேய கட்ஜு எப்போதுமே சர்ச்சைகளை விரும்புவர். ஜெயலலிதா குறித்தும் அவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து கருத்து ஈர்க்க முயல்கிறாரோ என்ற சந்தேகம் வலைவாசிகள் மத்தியில் உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications