நான்தான் பாபர் மசூதியை இடித்தேன்.. அதை நான் பெருமையாக கருதுகிறேன்.. பாஜக வேட்பாளர் சாத்வி பகீர்!
நான்தான் பாபர் மசூதியை இடித்தேன், அதை நான் பெருமையாக கருதுகிறேன் என்று பாஜக வேட்பாளர் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார்.
போபால்: நான்தான் பாபர் மசூதியை இடித்தேன், அதை நான் பெருமையாக கருதுகிறேன் என்று பாஜக வேட்பாளர் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார். இவர் பாஜக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார் .
மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பவர்களில் ஒருவரான சாத்வி பிரக்யா தாக்குர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.
இதில் கைது செய்யப்பட்டவர்தான் இந்து சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர். இவர் பெயிலில் வெளியே வந்து தற்போது பாஜக சார்பாக போபாலில் போட்டியிடுகிறார்.

என்ன பேட்டி
இந்த நிலையில் சாத்வி பாபர் மசூதி குறித்து தற்போது சர்ச்சையான பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார். அதில், நாங்கள் பாபர் மசூதியை இடித்தோம். நாங்கள் அதே இடத்தில் ராமர் கோவிலை கட்டுவோம். நாங்கள் எல்லோரும் சேர்ந்துதான் பாபர் மசூதியை இடித்தோம். நான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.

பாபர் மசூதி
நான் அதை பெருமையாக நினைக்கிறேன். பாபர் மசூதியின் மேல் ஏறி நான் அதை இடித்தேன். எனக்கு அதற்கான பலத்தை கடவுள் அளித்ததற்கு நன்றி. நாங்கள் எல்லோரும் சேர்ந்து இந்தியாவின் கரையை உடைத்தோம் என்று சாத்வி குறிப்பிட்டு இருக்கிறார்.

மாநில தேர்தல் ஆணையம்
இந்த நிலையில்தான் மாநில தேர்தல் ஆணையம் அவரின் பேச்சுக்கு எதிரான நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. தேர்தல் விதிகளை மீறி கலவரத்தை உண்டாக்கும் வகையில் அவர் பேசுவதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கு கண்டிப்பாக பதில் அனுப்புவேன் என்று சாத்வி கூறியுள்ளார்.

நான் இந்து
''நான் இந்து, என் கடமையை நான் செய்தேன்'' என்று அந்த நோட்டீஸுக்கு பதில் அளிப்பேன் என்று இவர் கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு பாஜக வாய்ப்பு வழங்கியதே பெரிய சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications