ஆன்மீக பயணம் மட்டுமே... அமிதாப் குணமடைய பிரார்த்தனை: ரஜினிகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆன்மீக பயணத்தில் அமிதாப் பச்சனுக்கு ரஜினி வேண்டுதல்

  டேராடூன்: இங்கு ஆன்மீக பயணமாகவே வந்துள்ளேன். அரசியல் குறித்து அதற்கான களத்தில் பேசலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

  அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், 15 நாட்கள் ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ளார். இன்று உத்ரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்ற அவருக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

  I have come here on a pilgrimage says Rajinikanth

  டேராடூனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது நண்பரும், நடிகருமான அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக கூறினார்.

  தற்போது ஆன்மீக பயணம் மட்டுமே வந்துள்ளதாகவும், அரசியல் பேச வேண்டிய களம் இதுவல்ல என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

  நான் இன்னமும் அரசியல்வாதியாகவில்லை என்றும், அரசியல் கட்சிப்பெயரை அறிவிக்கவில்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

  முன்னதாக ரஜினிகாந்த் ரிஷிகேஷ் சென்றார். குகையில் தரிசனம் செய்தார். குதிரையில் பயணம் செய்தார். ஆன்மிக குருமார்களை சந்தித்து ஆசி பெற்றார். இமய மலையில் இருந்து ரஜினி திரும்பி வந்த பிறகு தனது கட்சி பெயரை அறிவித்து தீவிர சுற்றுப்பயணம் செய்வார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

  ஆனால் ரஜினி பேசுவதைப் பார்த்தால் அரசியலை கைவிட்டு ஆன்மீகத்தை மட்டுமே பிடித்துக்கொள்வார் போல இருக்கிறதே.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajnikanth arrives in Dehradun, says, 'I have come here on a pilgrimage. It is a spiritual trip and has nothing to do with politics. Just now heard about it (Amitabh Bachchan's health). I will pray to God, he will be alright.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற