ரூ.13 லட்சத்திற்கு கோட் அணிந்த மோடி.. டிவிட்டரில் புகைப்படம் வெளியிட்டு கிண்டல் செய்த குத்து ரம்யா!
ரூபாய் 13 லட்சத்திற்கு கோட் அணிந்த பிரதமர் மோடியை கிண்டல் செய்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) டிவிட் செய்துள்ளார்.
டெல்லி: ரூபாய் 13 லட்சத்திற்கு கோட் அணிந்திருந்த பிரதமர் மோடியை கிண்டல் செய்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) டிவிட் செய்துள்ளார்.
கர்நாடகா தேர்தலை முன்னிட்டு தற்போது டிவிட்டரில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களுக்கும் பாஜக செய்தி தொடர்பாளர்களுக்கும் இடையில் பெரிய போரே நடந்து கொண்டு இருக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் திவ்யா ஸ்பந்தனா முழு பார்மில் டிவிட் செய்து பாஜகவினரை திணறடித்துக் கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் ஒன்றில் சில வாரம் முன்பு அணிந்து இருந்த கோட்டின் விலையை கண்டுபிடித்து டிவிட் செய்துள்ளார். மோடி அணிந்து இருந்த கோட்டின் பெயர் லோரோ பியானா ஜாக்கெட் ஆகும்.
திவ்யா தனது டிவிட்டில் ''மிகவும் பேன்சியாக உள்ளது. நீங்கள் அணிந்து இருக்கும் லோரோ பியானா ஜாக்கெட் மிகவும் பிடித்துள்ளது. வெறும் 17,000 யூரோதான். ரொம்ப கம்மி விலை. யாருடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி இதை வாங்கினீர்கள் மோடி? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
.@narendramodi ji so fancy! I love the Loro Piana jacket on you! Only 17,000 Euros! Very cheap. Who’s credit card was used to pay for this Modi ji? pic.twitter.com/yK2nsAG63O
— Divya Spandana/Ramya (@divyaspandana) May 1, 2018
உலகில் உள்ள மிகவும் விலை உயர்ந்த ஆடைகளில் இதுவும் ஒன்றாகும். இதன் தற்போதைய இந்திய மதிப்பு, ரூபாய். 1363324 ஆகும்.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications