'கே' ஆன எனக்கு 2 ஐயர் பையன்கள், 2 முஸ்லீம்கள் உள்பட 6 வரன் வந்துள்ளது: ஹரிஷ் ஐயர் அப்டேட்!
மும்பை: நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர், எனக்காக மாப்பிள்ளை தேடி என் தாய் விளம்பரம் கொடுத்துள்ளார் என்று மும்பையைச் சேர்ந்த ஹரிஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர் ஹரிஷ் ஐயர்(36). அவருக்கு ஏற்ற மாப்பிள்ளை தேடி அவரது தாய் பத்மா ஐயர் விளம்பரம் கொடுத்துள்ளார். இந்நிலையில் இது குறித்து ஹரிஷ் கூறுகையில்,

எந்த ஒரு தாயும் தனது மகன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புவது இயற்கையானது. என் தாயும் அப்படித்தான். அவருக்கு 57 வயதாகிறது. அவர் இறந்த பிறகு நான் தனியாக இருந்துவிடுவேனோ என்ற பயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

யாரையாவது காதலிக்கிறாயா? உனக்கு யாரையாவது பிடித்திருக்கிறதா? என்று என் அம்மா என்னிடம் கேட்டார். நான் இல்லை என்றதும் அவர் எனக்கு ஏற்ற பையனை தேடி விளம்பரம் கொடுக்க முடிவு செய்தார்.

எனக்கு வரும் மாப்பிள்ளை சைவப் பிரியராக, விலங்குப் பிரியராக இருக்க வேண்டும். எனக்கு வரும் பையன் ஐயராக இருக்க வேண்டும் என என் பாட்டி விரும்பியதால் விளம்பரத்தில் ஐயர் வீ்ட்டுப் பையன் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என் தாய் எனக்கு பையன் தேடி செய்தித்தாளில் விளம்பரம் கொடுக்க கஷ்டப்பட்டார். சில செய்தித்தாள்கள் எனக்கு மணமகன் தேவை என்ற விளம்பரத்தை வெளியிட மறுத்துவிட்டன. ஆனால் ஒரு நாளிதழ் விளம்பரத்தை வெளியிட்டது. விளம்பரத்தை பார்த்துவிட்டு 6 பேர் என்னை அணுகியுள்ளனர். அதில் 2 ஐயர்கள், 2 முஸ்லீம்களும் அடக்கம் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications