சனாதன ஒழிப்பு: அமித்ஷாவை தொடர்ந்து ராஜ்நாத் சிங்.. காங்கிரஸை கோர்த்துவிட்டு உதயநிதி மீது பாய்ச்சல்!
ஜெய்ப்பூர்: சனாதன தர்மத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்காக "இந்தியா" கூட்டணி நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சிலவற்றை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். அந்த வகையில், சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமாக சனாதன தர்மம் ஒழிப்பு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார்.

அமித்ஷா கண்டனம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், இந்து மதம், நமது கலாசாரத்தை "இந்தியா" கூட்டணி தலைவர்கள் வெறுக்கின்றனர். உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சு வாக்கு வங்கிக்கானதுதான் என விமர்சித்திருந்தார்.
உதயநிதி திட்டவட்டம்: ஆனாலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தாம் பேசியது சரிதான். சனாதன தர்ம ஒழிப்பு என்றுதான் பேசினேனே தவிர இனப்படுகொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசவில்லை. சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் நான் முன்னைவிட இப்போது உறுதியாக இருக்கிறேன் எனவும் பதிலடி கொடுத்திருந்தார்.
#WATCH | Jaisalmer, Rajasthan: On Tamil Nadu Minister Udhayanidhi Stalin's 'Sanatana Dharma' remark, Defence Minister Rajnath Singh says, "... They are attacking Sanatana Dharma. DMK has attacked Sanatana Dharma and Congress is quiet on it. I want to ask CM Gehlot why he didn't… pic.twitter.com/5Uwrc8AuvX
— ANI (@ANI) September 4, 2023
ராஜ்நாத் சிங் பேச்சு: இதனிடையே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: சனாதன தர்மத்தை தாக்கி பேசுகிறார்கள். திமுக சனாதன தர்மத்தை தாக்கிப் பேசினாலும் காங்கிரஸ் அமைதி காக்கிறது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சோனியா காந்தி, ராகுல் காந்தி என காங்கிரஸ் தலைவர்களும் அமைதி காப்பது ஏனாம்? சனாதன தர்மம் தொடர்பான விமர்சனத்துக்கு ஏன் பதில் தராமல் இருக்கிறது காங்கிரஸ்? உலகம் ஒரு குடும்பம் என்பதைத்தானே சனாதன தர்மம் வலியுறுத்துகிறது. உதயநிதி ஸ்டாலின் இது தொடர்பாக விளக்கம் தர வேண்டும். "இந்தியா" கூட்டணி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை எனில் நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.
-
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications