ரகசிய பாத்ரூமில் பதுக்கிய ரூ.5.7 கோடி ரூபாய் புதிய நோட்டுக்கள், 32 கிலோ தங்கம் சிக்கியது !
கர்நாடகா மாநிலத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ5.7 கோடி பணம் மற்றும் 32 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் ஹவாலா ஏஜென்டிடம் இருந்து ரூ.5.7 கோடி புதிய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 32 கிலோ தங்கமும் பிடிபட்டது.
நாட்டில் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1,000 ரூபாய் மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு தடை செய்தது. இதையடுத்து நாடு முழுவதும், கருப்புப் பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா ஹூப்ளி பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஹவாலா பணம் மாற்றும் ஏஜென்ட் ஒருவரின் வீட்டில் சோதனை நடைபெற்றது. இச்சோதனையில் ரூ5.7 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 32 கிலோ தங்கம் சிக்கியது. மேலும் 90 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குளியறையில் பதுக்கி வைத்திருந்த நோட்டுகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications