மோடி பிரதமரானால் நான் மகிழ்ச்சி அடைவேன்: முதன்முறையாக மனம் திறந்த அத்வானி
அகமதாபாத்: மோடி பிரதமரானால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் எனக் கூறியுள்ளார் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அத்வானி.
பாரதீய ஜனதாக் கட்சியின் அடுத்த பிரதம வேட்பாளராக அத்வானி அறிவிக்கப் படுவார் என எதிர்பார்க்கப் பட்டநிலையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் மனக்கசப்படைந்த அத்வானி கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்ததையடுத்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

கடந்த மாதம் போபாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் தோன்றிய போது, மோடி, அத்வானியின் கால்களைத் தொட்டு ஆசி வாங்கினார். ஆனால் அத்வானியோ அவருக்கு நேரடியாக ஆசி வழங்காமல், தனது கவனத்தை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அத்வானி, முதல் முறையாக நரேந்திர மோடியை பாராட்டி வெளிப்படையாக பேசியது பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், விழாவில் அத்வானி பேசியதாவது, ‘மோடி பிரதமர் ஆனால் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன். மோடியிடம் வழக்கத்திற்கு மாறான ஒரு தகுதி உள்ளது. அவர் எப்போதும் புதியனவற்றை செயல்படுத்துவது பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பார். இந்தியாவில மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன" என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications