“நான் விரும்பியதை செய்வேன்.. நீங்கள் என்ன கேட்பது” - தேர்தல் ஆணைய நோட்டீஸுக்கு மம்தா சர்ச்சை பதில்!
ராங்காத்: மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திற்கு பதிலடியாக நான் விரும்புவதையே செய்வேன் யாரேனும் கேட்டால் கர்ஜிப்பேன் என்று பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் ஆளும்கட்சிக்கு நெருக்கமான கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார், மெதினிப்பூர் போலீஸ் சூப்பிரண்டு பாரதி கோஷ், பிர்பும் போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் குமார் ஆகியோரை அதிரடியாக நீக்கி தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த நிலையில் அங்குள்ள நாதியா மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மம்தா பானர்ஜி இது பற்றி குறிப்பிட்டார்.

அப்போது அவர் ஆவேசமாக பேசும்போது, "நான் விரும்புவதை செய்வேன். சொல்வேன். என்னை யாராவது மிரட்டினால் நான் பதிலுக்கு கர்ஜிப்பேன். போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதால் எங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்காது. மிரட்டல் அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
இப்படி போலீஸ் அதிகாரிகளை மாற்றினால், மீதியானவர்களை அது ஒரே அணியில் கொண்டு வரும். அனைத்து போலீஸ் அதிகாரிகளும் எங்கள் ஆட்கள்தான். தேர்தல் கமிஷன் தனது புகார் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, பாரபட்சமற்ற விதத்தில் செயல்பட்டு தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்" என பேசியுள்ளார்.
தேர்தல் நடத்தை விதியை மீறியதாக நேற்று முன் தினம் மம்தா பானர்ஜிக்கு பதிலளிக்க கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், மம்தா பானர்ஜியின் மேற்கண்ட பேச்சு மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மமதாவின் கோட்டை தகர்கிறதா? அதிருப்தி எம்பிக்கள் எடுத்த அதிரடி முடிவு! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications