‘நீங்கள் காதலிக்கும் பெண்ணை கடத்தி வருவேன்' இளைஞர்கள் மத்தியில் பாஜக எம்எல்ஏ அடடே பேச்சு!!

நீங்கள் காதலிக்கும் பெண்ணை கடத்தி வருவவேன் என பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நீங்கள் காதலிக்கும் பெண்ணை கடத்தி வருவேன் : பாஜக எம்எல்ஏ பேச்சு!!-வீடியோ

    மும்பை: நீங்கள் காதலிக்கும் பெண்ணை கடத்தி வருவவேன் என பாஜக எம்எல்ஏ ஒருவர் இளைஞர்கள் மத்தியில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று முன்தினம் மும்பையில் தஹிஹண்டி எனப்படும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    காட்கோபரில் பாஜக எம்.எல்.ஏ. ராம் கதம் ஏற்பாட்டில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் ராம் கதம் பேசினார்.

    தொலைபேசியில் அழைக்கலாம்

    தொலைபேசியில் அழைக்கலாம்

    அவர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த இளைஞர்களை பார்த்து பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியதாவது, நீங்கள் எந்த ஒரு வேலைக்காகவும் என்னை சந்தித்து பேசலாம். எப்போது வேண்டுமானாலும் என்னை தொலைபேசியில் அழைக்கலாம்.

    100% உதவி செய்வேன்

    100% உதவி செய்வேன்

    தாங்கள் விரும்பும் பெண்கள் காதலை ஏற்க மறுக்கிறார்கள் என பல இளைஞர்கள் என்னிடம் உதவி கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் நூறு சதவீதம் இதில் உதவி செய்வேன்.

    கடத்தி வருகிறேன்

    கடத்தி வருகிறேன்

    நீங்கள் உங்களது பெற்றோரை அழைத்து கொண்டு என்னிடம் வாருங்கள். நீங்கள் காதலிக்கும் பெண்ணை அவர்களுக்குப் பிடித்து விட்டால், அந்த பெண்ணை நான் கடத்தி கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விடுகிறேன்.

    எம்எல்ஏ பேச்சு வைரல்

    எம்எல்ஏ பேச்சு வைரல்

    என்னுடைய செல்போன் எண்ணை குறித்து வைத்து கொள்ளுங்கள் என்ற அவர் தனது செல்போன் எண்ணையும் கூட்டத்தில் கூறினார். பாஜக எம்எல்ஏ
    ராம் கதமின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    எம்எல்ஏ மறுப்பு

    எம்எல்ஏ மறுப்பு

    ஆனால் தான் அவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை, என்னுடைய பேச்சு திரிக்கப்பட்டு உள்ளது என எம்எல்ஏ ராம் கதம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+