மாயமான ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிப்பு: விமானி, துணை விமானி, போலீஸ் அதிகாரியின் நிலை?
கோன்சா: அருணாச்சல பிரதேசத்தில் மாயமான பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டரின் பாகங்களை இந்திய விமானப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 4ம் தேதி காலை 10.30 மணிக்கு அருணாச்சல பிரதேச மாநிலம் திராப் மாவட்டத்தில் உள்ள கோன்சாவில் இருந்து 3 பேருடன் பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் கிளம்பியது. ஹெலிகாப்டரில் கேப்டன் எம்.எஸ். பிரார், கேப்டன் ராஜீவ் ஹொஸ்கோட்டே மற்றும் திராப் மாவட்ட துணை கமிஷனர் கமலேஷ் குமார் ஜோஷி ஆகியோர் இருந்தனர்.

ஹெலிகாப்டர் கிளம்பிய அரை மணிநேரத்தில் மாயமானது. இதையடுத்து அதை தேடும் பணியில் விமானப்படை விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. 6 நாட்களாக ஹெலிகாப்டரை தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் திங்கட்கிழமை காலை ஹெலிகாப்டரின் பாகங்கள் கோன்சாவில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பயணித்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
இது குறித்து பாதுகாப்புத் துறை(ஷில்லாங்) பி.ஆர்.ஓ. கேப்டன் அமித் மஹாஜன் கூறுகையில்,
மாயமான ஹெலிகாப்டரின் பாகங்கள் கோன்சா அருகே கிடப்பது திங்கட்கிழமை காலை 5.20 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையினரின் அயராத முயற்சியால் தான் பாகங்களை கண்டுபிடிக்க முடிந்தது.
அது மலைப்பகுதி என்பதாலும், மரங்கள் அடர்ந்துள்ளதாலும், மோசமான வானிலையாலும் தேடல் பணி தாமதமானது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications