இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை!
பாகிஸ்தான் நாட்டுடன் நடத்த வான்வெளி சண்டையின் போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் இந்திய வீரர்கள் மூலம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஸ்ரீநகர்: கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டுடன் நடத்த வான்வெளி சண்டையின் போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் இந்திய வீரர்கள் மூலம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான சண்டை நடந்து வந்தது. எப்போது வேண்டுமானாலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் நடக்கலாம் என்ற நிலை நிலவி வந்தது. அப்போது இரண்டு நாடுகளுக்கும் வான் சண்டை நடந்து வந்தது.

புல்வாமா தாக்குதலை அடுத்த நிலவி வந்த கடுமையான பிரச்சனை மற்றும் பாலக்கோடு தாக்குதல் காரணமாக இந்த வான் சண்டை நடந்து வந்தது. இந்த நிலையில் பிப்ரவரி 27ம் தேதி காலை இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் எப் -16 போர் விமானங்கள் நுழைந்து தாக்கியது. 2-3 விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்கியது.
இந்த தாக்குதலை அடுத்து அந்த பகுதிக்கு வேகமாக இந்தியாவின் போர் விமானங்கள், வேகமாக பாகிஸ்தான் விமானங்களை சுற்றி வளைத்து தாக்கியது. இந்த சம்பவம் நடந்த போது இந்தியாவின் மிக் 17 ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளானது. இதில் இருந்து 6 விமானப்படை வீரர்களும் பலியானார்கள்.
இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் எப்படி வெடித்தது என்று தற்போது விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஹெலிகாப்டர் இந்திய ஏவுகணை மூலம்தான் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்திய ஹெலிகாப்டரை பாகிஸ்தானுடையது என்று நினைத்து தாக்கி அழித்து இருக்கிறார்கள்.
இது தொடர்பாக இந்திய விமானப்படை துறை ரீதியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அதன்படி தற்போது இந்திய விமானப்படையின் ஸ்ரீநகர் Air Officer Commanding தற்போது நீக்கப்பட்டுள்ளார். இன்னும் சிலரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இவர் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. முதலில் மிக் 17 ஹெலிகாப்டர் பாகிஸ்தான் தாக்குதலில் வீழ்த்தப்பட்டது என்று கூறப்பட்டது. அதன்பின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மிக் 17 ஹெலிகாப்டர் வீழ்ந்தது என்று கூறினார்கள்.
இந்த நிலையில் மிக் 17 ஹெலிகாப்டர் இந்திய விமானப்படை மூலமே வீழ்த்தப்பட்டது உறுதியாகி உள்ளது. இந்த செய்தி தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications