மீண்டும் ஓர் விமான விபத்து... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமானி
ஜெய்பூர்: ராஜஸதானில் விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 ரக போர் பயிற்சி விமானம் ராஜஸதான் மாநிலம் ஜெய்சல்மாரில் இருந்து இன்று மாலை புறப்பட்டது.

இந்நிலையில், மாலை 6.10 மணி அளவில் போக்ரான் அருகே திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்து பாதுகாப்பாக கீழே குதித்து விமானி உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.
ஏற்கனவே, விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக விமானம், பெங்களூருவில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சென்ற இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.
இதேபோல் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக போர் விமானம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் விபத்துக்குள்ளாது. இதில் ஒரு விமானி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications