விமானப்படை விமானி பாவனா கோடியில் ஒருவர்... ஏன் தெரியுமா?
பெங்களூர்: இந்திய விமானப்படையில் இனி பெண்களும் போர் விமானங்களை இயக்கி எதிரிகளின் இலக்குகளை தாக்கலாம். முதல்கட்டமாக பாவனா காந்த், மோகனா சிங், அவனி சதுர்வேதி ஆகிய 3 பெண்கள் விமானப்படையின் தாக்குதல் பிரிவில் சேர்க்கப்படுகிறார்கள்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள துண்டிகலில் இருக்கும் விமானப்படை அகாடமியில் வரும் 18ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த மூன்று பெண் விமானிகளும் தாக்குதல் பிரிவில் இணையவுள்ளனர்.
இந்நிலையில் பாவனா காந்த் பற்றி விமானப்படையின் பி.ஆர்.ஓ. விங் கமாண்டர் அனுபம் பானர்ஜி ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,

பாவனா
பாவனா காந்த் பீகாரில் உள்ள தர்பங்காவை சேர்ந்தவர். அவர் பேகுசாராய் நகரில் வளர்ந்தவர். அவரது தந்தை இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தில் என்ஜினியராக உள்ளார். தாய் வீட்டை கவனித்துக் கொள்கிறார்.

படிப்பு
பாவனா டிஏவி பப்ளிக் ஸ்கூலில் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பிறகு பெங்களூரில் உள்ள பிஎம்எஸ் பொறியியல் கல்லூரியில் பி.இ.(மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ்) படித்தார்.

விமானப்படை
பறவை போன்று சுதந்திரமாக பறக்க வேண்டும் என பாவனா சிறுவயதில் இருந்தே ஆசைப்பட்டார். இதனால் தான் அவர் விமானப்படையில் சேர்ந்தார் என பானர்ஜி தெரிவித்துள்ளார்.

போர் விமானம்
ஸ்டேஜ் -I பயிற்சியை முடித்த பிறகு போர் விமானங்களை இயக்கும் அற்புதமான வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இது தான் என் வாழ்வில் இதுவரை நடந்த நல்ல காரியம். இது ஒரு துவக்கம் தான். நான் நாடுக்காக போராடி நாட்டையும், என் பெற்றோரையும் பெருமையடைய செய்வேன் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் பாவனா.

பொழுதுபோக்கு
போர் விமானங்களை இயக்க தயாராகியுள்ள பாவனாவுக்கு பேட்மிண்டன், மலையேறுதல், புகைப்படம் எடுத்தல், சமையல், நீச்சல் அடித்தல் மற்றும் பயணம் செய்தல் ஆகியவை பொழுதுபோக்காம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications