கருத்து கணிப்புகள் சரியானால் காங்கிரஸ் கட்சிக்கு பேரழிவே- சொல்வது திக்விஜய் சிங்!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் கருத்து கணிப்புகள் சரியானால் அது காங்கிரஸ் கட்சிக்குப் பேரழிவு என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 7-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. டெல்லி சட்டசபை தேர்தலில் 67% வாக்குகள் பதிவானது. டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

காங்கிரசும் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற மல்லுக்கட்டுகிறது. ஆனால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நிலை மோசமாகவே உள்ளது என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்லி சட்டசபைத் தேர்தல் கருத்து கணிப்புகள் சரியானால், அது காங்கிரஸ் கட்சிக்கு பேரழிவு ஆகும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
I don't trust Poll Surveys but if what they show is correct obviously disastrous for Congress but Modi/ BJP would also need introspection.
— digvijaya singh (@digvijaya_28) February 9, 2015 இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவு திக்விஜய் சிங், எனக்கு கருத்து கணிப்புக்கள் மீது எல்லாம் நம்பிக்கை கிடையாது, ஆனால் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டது சரியானால், அது வெளிப்படையாகவே காங்கிரஸ் கட்சிக்கு பேரழிவுதான். பாரதிய ஜனதாவும், பிரதமர் மோடியும் சுய பரிசோதனை செய்துக்கொள்ளும் தேவையும் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே கருத்துக் கணிப்பு முடிவுகளை நிராகரித்து விட்டது. டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறாது என்று தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கடைசி பஸ் பிடிக்க போற மாதிரி அவசரப்பட்டது எல்லாம்.. இதுக்குத்தானா? வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்! -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications