முதல் முதலாக ரம்ஜானுக்கு கறிக்கடை லீவு.. நவராத்திரியில் உ.பி. ரோடில் நமாஸ் செய்தால் பாஸ்போர்ட் ரத்து
கான்பூர்: நவராத்திரி திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஏப்ரல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேசமயம், முஸ்லிம்களின் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து இருக்கின்றன. கோயில் நகரமான வாரணாசியில் நவராத்திரி நாட்களில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் அடைக்கப்படவேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, சாலையில் நமாஸ் செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று 31ம் தேதி நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. முன்னதாக, ரம்ஜான் பண்டிகையையொட்டி உத்தர பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன..

முன்னதாக, அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் போலீசார் இருபிரிவினரை சேர்ந்தவர்களை அழைத்து அமைதி கூட்டம் நடத்தினார்கள்.. அப்போது, இஸ்லாமியர்களுக்கு உத்தர பிரதேச மாநில காவல்துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருந்தது.
மசூதிக்குள் நமாஸ்
இது தொடர்பாக மீரட் போலீஸ் கமிஷனர் ஆயுஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''ரம்ஜான் மாதம் என்றால் இது மிகவும் அதிகமாக இருக்கும். மக்கள் மசூதிக்குள் நமாஸ் செய்யும்படி கேட்டுக்கொள்ளும்படி மத தலைவர்கள் மற்றும் இமாம்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, சாலையில் நமாஸ் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாராவது சாலை மற்றும் தெருவில் நமாஸ் செய்தால் அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படலாம். அப்படி பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டால் புதிய பாஸ்போர்ட் எடுக்க கோர்டில் தடையில்லா சான்று வாங்க வேண்டியிருக்கும். பதட்டமான பகுதிகள் ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
சோசியல் மீடியா தீவிரமாக கண்காணிக்கப்படும். வதந்தியைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த வருடம் இப்படி விதிகளை மீறிய 200 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது'' என்று தெரிவித்தார்.
இறைச்சி கடைகளுக்கு தடை
நவராத்திரி பண்டிகை இன்றுமுதல் 9 நாட்களுக்கு கொண்டாடப்பட உள்ள நிலையில், 9 நாள்களுக்கு அனைத்து மீன் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக வாரணாசி மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து வாரணாசி மாநகராட்சி சொலலும்போது, "இந்துக்கள் நவராத்திரியை மிகவும் புனிதமாக கருதுவார்கள் என்பதை முஸ்லிம் சகோதரர்கள் புரிந்து கொள்ளவேண்டும். எனவே 9 நாட்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும். நாங்கள் என்ன 360 நாளுமா நிறுத்த சொல்கிறோம்? வாரணாசி ஆன்மீக மற்றும் கலாசார தலைநகரம். தினமும் 2 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். அதனால் பாரம்பரிய நடைமுறை பின்பற்றவேண்டும். எதையும் கட்டாயப்படுத்துவதாக இருக்கக்கூடாது'' என்று கூறியிருந்தார்.
முதல்முறையாக கடைகள் அடைப்பு
அந்தவகையில், முதல் முறையாக நவராத்திரிக்கு இறைச்சிக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.. இதனால், பண்டிகைக்கு முஸ்லிம்கள் இறைச்சி வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்போது, சாலையில் நமாஸ் செய்தால் பாஸ்போர்ட் ரத்து என்ற அறிவிப்புகளால், இஸ்லாமியர்களிடையே சலசலப்பு எழுந்துள்ளது.
பாஸ்போர்ட்டை ரத்து செய்வது என்ற போலீஸார் முடிவுக்கு மத்திய அமைச்சர் ஜெயந்த் செளத்ரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சொல்லும்போது, ''போலீஸார் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்வோம் என்று சொல்லக்கூடாது. சாலையை ஆக்கிரமிப்பு இல்லாமல் வைத்துக்கொள்வது நிர்வாகத்தின் பொறுப்பு. இது குறித்து சமுதாயத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவேண்டும்'' என்று கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications