பிரதமர் மோடி காரில் அமர்ந்ததும் செய்யும் முதல் விஷயம் இதுதான்! வைரலாகும் வீடியோ
Recommended Video

டெல்லி: காரில் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை பிரதமர் மோடியை கொண்டு விளக்கியுள்ளது மத்திய அரசு.
மத்திய அரசின், ஊடகத் தொடர்பு அமைப்பான (PIB) தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளது. "நமது பிரதமர் காரில் ஏறியதும் முதலில் செய்யக் கூடிய விஷயம் அவரது சீட் பெல்ட்டை அணிவது தான். சீட் பெல்ட் அணியாமல் இருக்க நீங்கள் சொல்லும் சாக்குப்போக்கு என்ன" என்று கேள்விக்குறியோடு இருக்கிறது அந்த வாசகம்.

இத்துடன் ஒரு குட்டி வீடியோவையும் வெளியிட்டு உள்ளார்கள். அதில் பிரதமர் காரில் ஏறியதும் சீட் பெல்ட் அணிவது ஃபோகஸ் செய்து காட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நிறைந்த வாகனத்தில் பயணிக்கும் பிரதமரே, இதுபோல சீட் பெல்ட் அணியும்போது நீங்கள் ஏன் அணிய கூடாது என்று மக்களைப் பார்த்து கேட்பது போல உள்ளது, இந்த விழிப்புணர்வு வீடியோ.
First thing the Prime Minister does when getting in his car is put his seat belt on...Whats your excuse??
— PIB India (@PIB_India) August 21, 2018
Wear your seat belt.#SadakSurakshaJeevanRaksha #RoadSafety @nitin_gadkari @akshaykumar @PMOIndia @narendramodi @mansukhmandviya pic.twitter.com/ewLKjJAlxb
இந்த வீடியோ, அதிக நெட்டிசன்களை சென்று சேர்ந்துள்ளது. விழிப்புணர்வுக்கான, நல்ல முயற்சி என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
சீட் பெல்ட் அணிந்தால், திடீர் பிரேக் போடும் போதோ, விபத்தின்போதோ, அடிபடும் வாய்ப்பு குறையும் என்பதால், சட்டப்படி, இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications