சீனியாரிட்டி முறையை பின்பற்றியிருந்தால் செல்லமேஸ்வர் அப்போவே தலைமை நீதிபதி ஆகியிருப்பாராம்!
சீனியாரிட்டி அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டாலும் அதிர்ஷ்டசாலிகளே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாகின்றனர்.
Recommended Video

டெல்லி: சீனியாரிட்டி அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டாலும் அதிர்ஷ்டசாலிகளே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாகின்றனர். சீனியாரிட்டி முறை முறையாக பின்பற்றப்பட்டிருந்தால் நீதிபதி செல்லமேஸ்வர் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதமே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகியிருப்பாராம்.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடு குறித்து 4 மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை கூறினர்.
வழக்குகள் ஒதுக்கீடு, நீதிமன்ற நிர்வாகம் போன்ற விஷயங்களில் தலைமை நீதிபதி தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், இந்த நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

சீனியாரிட்டி அடிப்படையில்
நீதிபதிகளின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதிகள் சீனியாரிட்டி அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டு வந்தனர்.

நீதித்துறையின் புனித தத்துவம்
சீனியாரிட்டி என்பது நீதித்துறையின் புனித தத்துவமாகும். உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு சீனியாரிட்டி என்பது முக்கிய உணர்ச்சிமிகு பிரச்சனையாகும்.

அதிர்ஷ்டம் வேண்டும்
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சீனியாரிட்டி அடிப்படையிலேயே நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர். இதேபோல் உச்சநீதிமன்ற நீதிபதிகளும் சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால் அதிர்ஷ்டசாலிகள் தான் உச்சநீதிமன்ற நீதிபதியாகின்றனர்.

பயபக்தியுடன் கடைபிடிப்பு
உயர்நீதிமன்ற நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றாமல் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி உயர்த்தப்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் அரங்கேறியிருக்கிறது. சீனியாரிட்டி கொள்கை மிகுந்த பயபக்தியுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் 25 நீதிபதிகள்தான்..
உச்ச நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி உட்பட 31 நீதிபதிகளை நியமிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், தற்போது தலைமை நீதிபதி உட்பட 25 நீதிபதிகள் பதவியில் உள்ளனர். இவர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் ‘சீனியாரிட்டி' வழங்கப்படுகிறது.

செல்லமேஸ்வர்தான்..
உச்சநீதிமன்றத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்றால் முதலில் பதவியேற்கும் நீதிபதியை சீனியர் என கருதப்படுவார். அப்படி பார்க்கும் போது உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக செல்லமேஸ்வர்தான் நியமிக்கப்பட வேண்டும்.

பறிக்கப்பட்ட வாய்ப்பு
ஆனால் சீனியாரிட்டி முறை பின்பற்றப்படாதால் செல்லமேஸ்வர் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. செல்லமேஸ்வர் நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு எதிராக குற்றம்சாட்டிய 4 நீதிபதிகளில் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு முன் மிஸ்ரா
செல்லமேஸ்வர் உயர்நீதிமன்ற நீதிபதியாக ஜூன் 23ஆம் தேதி 1997ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவருக்கு முன்னதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மிஸ்ரா 1996ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

தலைமை நீதிபதியான செல்லமேஸ்வர்
நீதிபதி கெஹர் பிப்ரவரி 8ஆம் தேதி 1999ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். ஆனார் செல்லமேஸ்வர் கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2007ஆம் ஆண்டு 3ஆம் தேதி உயர்த்தப்பட்டார். ஆனால் கெஹகர் 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதமும் மிஸ்ரா 2009ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதியும் தான் நியமிக்கப்பட்டனர்.

2 ஆண்டுகள் சீனியர்
ஆனால் நீதிபதி கெஹர் 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதியே உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுவிட்டார். சீனியாரிட்டி அடிப்படையில் 2 ஆண்டுகள் மூத்தவரான செல்லமேஸ்வர் கொலிஜியம் முறையால் 2011ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதிதான் உச்சநீதிமன்ற நீதிபதியானார். அன்றே செல்லமேஸ்வருக்கு முன்னதாக தீபக் மிஸ்ரா பதவியேற்றார்.

மீண்டும் விளையாடிய விதி
நீதிபதி செல்லமேஸ்வர் வழியில் மீண்டும் விதி விளையாடியது. உச்சநீதிமன்ற நீதிபதியாக மிஸ்ரா பதவியேற்ற பின்னரே செல்லமேஸ்வர் பதவியேற்றதால் தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ராவுக்கு அடுத்து சீனியர் நீதிபதியாக உள்ளார் செல்லமேஸ்வர்.

கொலிஜியம் முறைக்கு எதிர்ப்பு
சீனியாரிட்டி முறை ஒழுங்காக பின்பற்றப்பட்டிருந்தால் செல்லமேஸ்வர் 2017ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதியே நீதிபதி டிஎஸ் தாக்கூரின் ஓய்வுக்குப் பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகியிருப்பார். அதாவது நீதிபதி கெஹருக்கு முன்னதாகவே. இதன்காரணமாகவே செல்லமேஸ்வர் கொலிஜியம் முறைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications