ஐ.ஐ.டி கல்விக் கட்டணம் 2 மடங்காக உயர்ந்து ரூ 2 லட்சமாக எகிறியது- ஏழை மாணவர்களுக்கு சலுகை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய அளவிலான தரம் வாய்ந்த பொறியியல் கல்வி நிலையங்களைக் கொண்டுள்ள ஐஐடியின் கல்விக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளதாக அக்கல்வி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் ஐ.ஐ.டியின் கல்விக் கட்டணம் ரூபாய் 90 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு குறித்து ஐஐடி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும், குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு ஐஐடி சலுகையை அறிவித்துள்ளது.
மேலும், இந்தக் கல்விக் கட்டண உயர்வு எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று ஆண்டு வருமானமே ரூபாய் 1 லட்சத்துக்கும் கீழ் உள்ள மாணவர்களுக்கு கட்டண உயர்வு கிடையாது என்று ஐஐடி அதிரடியாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications