இளையராஜா இதுவரை பெற்ற பத்ம விருதுகள் என்னென்ன?
தற்போது இசைஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதுவரை விருதுகளின் பட்டியலை பார்ப்போம்.
Recommended Video

டெல்லி : இசைஞானி இளையராஜாவுக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் அவர் இதுவரை பெற்ற விருதுகளை என்னென்ன என்பதை குறித்த விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வந்தவர் இளையராஜா. அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.

தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர். இதுவரை இளையராஜாவுக்கு கிடைத்த விருதுகளின் பட்டியல்:
- தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றவர்.
- 1988-ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது
- 1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருது
- இசையில் சாதனை புரிந்ததற்காக 1994-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினாலும் முனைவர், டாக்கடர் பெற்றவர்.
- 2010-இல் பத்ம பூஷண் விருது.
- இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறைப் பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள், 1985இல் - சாகர சங்கமம் (தெலுங்கு)
- 1987இல் - சிந்து பைரவி (தமிழ்), 1989இல் - ருத்ர வீணை (தெலுங்கு), 2009இல் - பழஸிராஜா (மலையாளம்), 2016இல் - தாரை தப்பட்டை (பின்னணி இசை) ஆகியன ஆகும். தற்போது நாட்டின் 2-ஆவது உயரிய குடிமகன் விருதான பத்மவிபூஷண் விருதை 2018-ஆம் ஆண்டுக்காக பெறுகிறார் இசைஞானி.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications