கைநாட்டு, ஆனால் ரூ 14.5 கோடி சொத்து... இது ராஷ்டிரிய ஆம் கட்சித் தலைவி ராக்கி சாவந்த்!
மும்பை: மும்பையின் வடமேற்குத் தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார் கவர்ச்சி நடிகையும், ராஷ்டிரிய ஆம் கட்சித் தலைவியுமான ராக்கி சாவந்த். அப்போது தனது வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு ரூ.14 கோடியே 69 லட்சம் என்றும், தனக்கு எழுதப்படிக்க தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார் ராக்கி.
சுயம்வரம் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் சர்ச்சையில் சிக்கிய கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். தேர்தலில் போட்டியிட பாஜகவின் அழைப்பை புறக்கணித்த ராக்கி, தனது மும்பை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக முதலில் அறிவித்தார்.
பின்னர், தனது முடிவை மாற்றிக் கொண்ட ராக்கி ‘ராஷ்டிரிய ஆம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கி லோக்சபா தேர்தலில் களமிறங்குகிறார். காங்கிரஸ் சார்பில் குருதாஸ் காமத், சிவசேனா கட்சி சார்பில் கஜானன் கிர்த்தி ஆகியோர் களமிறங்கும் வடமேற்கு மும்பை தொகுதியில் அவர்களை எதிர்த்து போட்டியிடுகிறார் ராக்கி.
இதற்காக நேற்று மும்பை பாந்திரா கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ராக்கி. அதில் தன் சொத்து மதிப்பு என ராக்கி குறிப்பிட்டுள்ளவையாவன:-

மொத்தம் ரூ.14.69 கோடி சொத்து...
தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.14 கோடியே 69 லட்சம் என்று தெரிவித்துள்ளார் ராக்கி சாவந்த்.

நகைகள்...
அதில், அசையும் சொத்தின் மதிப்பு ரூ.3 கோடியே 57 லட்சம், அசையா சொத்தின் மதிப்பு ரூ.11 கோடியே 12 லட்சம், கையிருப்பு ரூ.96 ஆயிரத்து 427, வங்கி வைப்புத்தொகை ரூ.39 லட்சத்து 13 ஆயிரம், இன்சூரன்ஸ் மற்றும் சேமிப்புகள் ரூ.2 கோடியே 12 லட்சம், நகைகள் 7 லட்சத்து 55 ஆயிரம் ஆகும்.

வீட்டின் மதிப்பு...
நடிகை ராக்கி சாவந்த் அசையா சொத்து விவரத்தில் மும்பையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகமும் அடங்கும். அந்த வீட்டை வாங்கிய போது மதிப்பு ரூ.5 கோடியே 3 லட்சத்து 15 ஆயிரத்து 500. அதன் தற்போதைய சந்தை விலை ரூ.11 கோடியே 12 லட்சத்து 59 ஆயிரமாம்.

கடன்காரி...
ரூ.72 லட்சத்து 50 ஆயிரம் வருமான வரி பாக்கி உள்பட ரூ.2 கோடியே 52 லட்சம் கடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வழக்கு நிலுவையில்...
மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார் ராக்கி.

கைநாட்டு....
மேலும், கல்வித்தகுதி பற்றி குறிப்பிடுகையில், தன்னை ‘எழுதப்படிக்க தெரியாதவள்' எனக் குறிப்பிட்டுள்ளார் ராக்கி சாவந்த்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications