கொலை பட்டியலில் உள்ளவர்களுக்கு விஷ கடிதங்களை அனுப்ப இந்திய முஜாகிதீன் திட்டம்!'
டெல்லி: தங்களது கொலை பட்டியலில் உள்ளவர்களை கொல்ல, சம்பந்தப்பட்டவர்களுக்கு விஷம் தோய்த்த கடிதங்களை அனுப்ப இந்திய முஜாகிதீன் இயக்கம் திட்டமிட்டிருந்ததாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் சட்டவிரோதமாக ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை அமைத்த வழக்கில் இந்திய முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மேலும் பல வழக்குகளும் உள்ளன.
இந்நிலையில் ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை அமைத்தது தொடர்பான வழக்கில் அவர்கள் 6 பேர் மீதும் துணை குற்றப்பத்திரிகை ஒன்றை டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறையினர் நேற்று தாக்கல் செய்தனர்.
அதில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் தெசின் அக்தர், முகமத் அசார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, தங்களது கொலைப்பட்டியலில் உள்ளவர்களுக்கு மெக்னீசியம் சல்பேட், ஆமணக்கு விதை உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட விஷ கலவையில் தோய்த்த கடிதங்களை அனுப்பி கொல்ல திட்டமிட்டதாக கூறினர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரணையில் தெரிவித்த விஷ கலவையை முகமத் அசாரின் இருப்பிடத்திலிருந்து கைப்பற்றியதாகவும் அந்த குற்றப்பத்திரிகையில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications