மோடி அறிவிப்புக்கு முன் ‘புதிய நோட்டுகள்’ படம் வெளியானது எப்படி.. யார் அந்த ‘கருப்பு ஆடு’?
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே புதிய ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுகள் இணையத்தில் வெளியானது எப்படி என மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
டெல்லி: பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே புதிய ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுகள் இணையத்தில் வெளியானது எப்படி என விசாரணை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று இரவு பிரதமர் மோடி கருப்பு பணம் ஒழிப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்றும், அதற்குப் பதில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், மோடியின் இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே புதிய ரூபாய் நோட்டுகளின் படம் இணையத்தில் வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான இந்தப் படங்கள் வைரலாகப் பரவியது.
இந்நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னர் இந்தப் படங்கள் எப்படி லீக்கானது என்பது குறித்து மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட போது, அங்கிருந்த ஊழியர் யாராவது தான் இந்த புகைப்படங்களை எடுத்து, அதனை வெளியிட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications