இந்த ஆண்டு பருவமழை அமோகம்... ஜூலையில் 107% பெய்யுமாம்!
டெல்லி: நாடு முழுவதும் ஜூலை மாத மழை 107சதவீதமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது விவசாயிகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக, நேற்று மதுரையில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை வரும் 6ம் தேதி தொடங்க உள்ளதன் காரணமாக தமிழக, கேரள எல்லையில் உள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்யும். இதற்கிடையே, அடுத்து வருகிற பருவமழை காலங்களில் இயல்பைவிட அதிக அளவில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை காலம்
கோடை காலத்துக்கு பிறகு ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்குகிறது. அப்போது கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மேற்கு மாநிலங்களில் மழை பெய்யும். அக்டோபர் மாதம் முதல் வட கிழக்கு பருவமழை பெய்யும். இதனால் தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் மழை பெய்யும்.

வானிலை ஆய்வு மையம்
இந்த ஆண்டுக்கான நீண்ட கால மழை அறிவிப்பை முதல் முறையாக ஏப்ரல் 12ம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. அதற்கு பிறகு தற்போது இரண்டாவது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

107 சதவிகித மழை
இந்தாண்டு சராசரியாகவும், இயல்பைவிட அதிகமாகவும் மழை பெய்ய 96 சதவீதம் வாய்ப்புண்டு. குறிப்பாக, 'நாடு முழுவதும் ஜூன் மாதத்தில் 107 சதவீத பருவ மழையும், ஆகஸ்ட் மாதத்தில் 104சதவீத பருவ மழையும் இருக்கும்.

நல்ல மழைக்கு வாய்ப்பு
வடமேற்கு மாநிலங்களில் 108 சதவீதமும், மத்திய மாநிலங்களில் 113 சதவீதமும், தீபகற்ப பகுதியில் 113 சதவீதமும், வடகிழக்கு மாநிலங்களில் 94 சதவீத மழையும் எதிர்பார்க்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பத்திற்குக் காரணம்
தமிழகத்தில் கடல் காற்று தரையில் வந்து விழுவது தாமதம் ஆவதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications