பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்க தடை!
மும்பை: பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்க தடை விதிக்கப்படுவதாக இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் சர்வேதேச கட்டுப்பாட்டு பகுதிக்கு அப்பால் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நிகழ்த்தியதையடுத்து, பாகிஸ்தான் பதிலடி கொடுக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பின்பேரில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களை ஒட்டியுள்ள எல்லை கிராமங்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. பாதுகாப்பு பணியில் ராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய திரைப்படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே இயல்பு நிலை திரும்பும் வரை பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்க தடை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தடை பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications