மேற்கு வங்கத்தில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை பள்ளியிலிருந்து நீக்கிய நிர்வாகம்
பிஷாம்பூர்: மேற்கு வங்க மாநிலம் பிஷாம்பூரில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனை தலைமை ஆசிரியர் பள்ளியிலிருந்து நீக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகு வங்க மாநிலம் பிஷாம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் தெற்கு பர்கானாஸ் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் படித்து வந்தான். அவனது தந்தை அந்த பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு வரை அவர் அந்த பகுதியில் எழுது பொருள் அங்காடி நடத்தி வந்தார்.
இந்நிலையில், அவருக்கு உயிர்கொல்லி நோயான எயிட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரிடமிருந்து அவருடைய மனைவிக்கும் பரவியது. இதனைக் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவருடைய கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவதைக் குறைத்தனர். இதனால் அவருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த கடையை மூடிவிட்டு அதே பகுதியில் உள்ள ஒரு துணிக்கடைக்கு வேலைக்குச் சென்றார்.
இதனையடுத்து, தங்களது 7 வயது மகனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போக, பள்ளிக்கு அவ்வப்போது விடுப்பு எடுத்துள்ளான். இதுகுறித்து தலைமை ஆசிரியர் சிறுவனின் பெற்றோர்களை அழைத்து காரணம் கேட்ட போது, அவன் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்த மாணவனை இனி பள்ளிக்கு வரவேண்டாம் என தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். மேலும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் அந்த சிறுவனின் பாட்டியை அழைத்து, அவரையும் எயிட்ஸ் நோயை உறுதிப்படுத்துவதற்கான சோதனையை செய்யுமாறு தலைமையாசிரியர் சொல்லியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் அளித்தனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தலைமையாசிரியாரை அழைத்து விளக்கம் கேட்ட போது, பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வந்ததால், அந்த பையனை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் அவ்வாறு அனுமதித்தால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும் கூரியதனாலேயே தாம் அவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரிவித்தார். ஆனால், அந்த மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, அவரை எச்சரிக்கை செய்த கல்வித்துறை அதிகாரிகள் மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்க்குமாறு உத்தரவிட்டனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications