எல்லையில் ஒரே நாளில் 25 முறை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்!
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று ஒரே நாளில் மட்டும் 25 வெவ்வேறு இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அண்மைக்காலமாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் உச்சமாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 25 இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று காலை 7.30 மணிக்கு தொடங்கிய இந்தத் தாக்குதல் இரவு முழுவதும் நீடித்தது. இதற்கு இந்தியத் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இம்மோதலில் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரு வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த மோதலை பயன்படுத்தி ஊடுருவ முயன்ற தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.












Click it and Unblock the Notifications