உங்களை காதலிக்கிறேன்.. நயன்தாரா போட்டோவை காட்டி பீஹாரில் கொள்ளையனை பிடித்த சூப்பர் போலீஸ்!
பீஹாரில் நடிகை நயன்தாராவின் போட்டோவை பயன்படுத்தி பெண் போஸீஸ் ஒருவர் கொள்ளையனை பிடித்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.
பாட்னா: பீஹாரில் நடிகை நயன்தாராவின் போட்டோவை பயன்படுத்தி பெண் போலீஸ் ஒருவர் கொள்ளையனை பிடித்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.
பீஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து 150 கி.மீ., தொலைவில் உள்ள தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கய் குமார் மகடோ. பாஜகவைச் சேர்ந்த இவர் அம்மாநில அமைச்சராக உள்ளார்.
சமீபத்தில் இவரது காஸ்ட்லி செல்போன் காணாமல்போனது. இதுகுறித்து அமைச்சர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சிக்கிய கொள்ளையன்
மதுபாலா தேவி என்ற பெண் போலீஸ் அதிகாரி காணாமல்போன செல்போன் தொடர்பாக விசாரணை நடத்தினார். மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளை ட்ராக் செய்த போது அதனை முகமது ஹஸ்னெயின் என்பவர் பயன்படுத்தி வருவது தெரியவந்தது.

தோல்வியடைந்த முயற்சிகள்
இதையடுத்து முகமதுவை பிடிக்க போலீஸார் பலமுறை முயற்சி செய்தனர். ஆனால் கொள்ளையன் போக்கு காட்டியதில் அத்தனை முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

காதலிப்பதாக கூறிய போலீஸ்
இதையடுத்து எப்படியாவது கொள்ளையனை பிடித்துவிட வேண்டும் என திட்டம் தீட்டிய போலீஸ் அதிகாரி மதுபாலா சாதாரண ஒரு பெண்ணை போல முகமதுவுக்கு போன் செய்தார். மேலும் முகமதுவை காதலிப்பதாகவும் இனிமையாக பேசி நடித்தார் மதுபாலா.

பேசி பேசியே..
ஆரம்பத்தில் இதனை ஏற்க கொள்ளையன் முகமது மறுத்துள்ளார். ஆனால் பேசி பேசியே முகமதுவை தனது வலையில் விழ வைத்தார் அதிகாரி மதுபாலா.

நயன்தாராவின் போட்டோ
காதலியை பார்க்க ஆசைப்பட்ட முகமது அவரது போட்டோவை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, மதுபாலா, தான் எனக்கூறி நடிகை நயன்தாராவின் புகைப்படத்தை முகமதுவுக்கு அனுப்பினார். தனது புரோபைலிலும் நயன்தாரா படத்தை வைத்தார்.

மடக்கிப்பிடித்த போலீஸ்
படத்தில் உள்ளது நடிகை என தெரியாமல் அவரது அழகில் சொக்கிப் போன முகமது மதுபால கூறிய இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு பர்ஹா அணிந்திருந்த மதுபாலா தேவி, மற்றும் மறைந்திருந்த போலீசார் முகமதுவை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

சமயோசிதமாக யோசித்து..
சமயோசிதமாக யோசித்து நடிகை நயன்தாரா போட்டோவை பயன்படுத்தி கொள்ளையனை பிடித்த போலீஸ் அதிகாரி மதுபாலா தேவியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்..
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications