Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டியர் சச்சின் சார்.. உங்கள பாக்கனும் பேசனும்.. குட்டி ரசிகரின் கடிதம்.. நெகிழ்ந்து போன சச்சின்!

ஒரு குட்டி ரசிகரின் கடிதத்திற்கு டிவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டியர் சச்சின்.. குட்டி ரசிகரின் கடிதம்.. நெகிழ்ந்து போன சச்சின்!- வீடியோ

    மும்பை: ஒரு குட்டி ரசிகரின் கடிதத்திற்கு டிவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

    கிரிக்கெட்டின் கடவுள், கிரிக்கெட் ஜாம்பவான் என்று போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கருக்கு. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவருக்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

    டியர் சச்சின் சார்

    டியர் சச்சின் சார்

    இந்நிலையில் சச்சினுக்கு குட்டி ரசிகர் லெட்டர் ஒன்றை தன் கைப்பட எழுதியுள்ளார். டியர் சச்சின் சார்.. என ஆரம்பித்து தன்னை ஜான்ஹவி சமீப் லாட் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்த சிறுவன் தான் சச்சினின் மிகப்பெரிய ஃபேன் என்று கூறியுள்ளான்.

    அதிகம் கேள்வி பட்டிருக்கிறேன்

    அதிகம் கேள்வி பட்டிருக்கிறேன்

    தான் 7ஆம் வகுப்பு படிப்பதாகவும் தனக்கு 12 வயதாவதாகவும் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளான் சிறுவன். தான் ஒரு மகாராஷ்டிரன் என்றும் உங்களை (சச்சின்) பற்றி அதிகம் கேள்வி பட்டிருக்கிறேன் என்றும் அந்த சிறுவன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளான்.

    நீங்கள் பிரபலமானவர்

    நீங்கள் பிரபலமானவர்

    மேலும் சச்சினை அதிகமாக டிவி, நியூஸ்பேப்பர், போஸ்டர்ஸ், கூகுள் யூட்யூப்பில் பார்த்துள்ளதாகவும் ஜான்ஹவி தெரிவித்துள்ளான். நீங்கள் மிக பிரபலமானவர் என எனக்கு தெரியும்.

    பார்க்க முடியாததால் கடிதம்

    பார்க்க முடியாததால் கடிதம்

    ஆனால் உங்களை பார்க்கவேண்டும், பேச வேண்டும். ஆனால் அது முடியாது அதனால் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் என்று ஜான்ஹவி தனது கடிதத்தில் கூறியுள்ளான். உங்களுடைய பல வீடியோக்களை தான் யூட்யூப்பில் பார்த்துள்ளதாக கூறிய ஜான்ஹவி அவை மிகவும் பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளான்.

    போட்டோக்கள் சேகரிப்பு

    போட்டோக்கள் சேகரிப்பு

    குறிப்பாக சச்சினின் முதல் நேர்காணல் வீடியோ மிக அருமையாக இருப்பதாக ஜான்ஹவி தெரிவித்துள்ளான். Zee மராத்தி சேனலில் சச்சின் பங்கேற்ற நிகழ்ச்சியை பார்த்ததாகவும் ஜான்ஹவி கூறியுள்ளான். மேலும் சச்சின் அனைத்து போட்டோக்களையும் சேகரிக்க முயற்சிப்பதாகவும் ஜான்ஹவி சமீப் தெரிவித்துள்ளார்.

    சச்சின் பெயரில் காலேஜ்

    சச்சின் பெயரில் காலேஜ்

    தனது தம்பியின் பெயர் நிஷாத் என்றும் 4ஆம் வகுப்பு படிப்பதாகவும் தெரிவித்துள்ளான். மேலும் தனது தம்பியின் புத்தகத்தில் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்ற பெயரில் காலேஜ் உள்ளது என்றும் சிறுவன் ஜான்ஹவி சமீப் தெரிவித்துள்ளான்.

    டிவிட்டரில் நன்றி

    டிவிட்டரில் நன்றி

    இந்தக் கடிதத்தை பார்த்து நெகிழ்ந்துபோன சச்சின் அந்த கடிதத்தின் போட்டோவை டிவிட்டரில் ஷேர் செய்து நன்றி கூறியுள்ளார். தனக்கு இந்த கடித்தை பார்த்ததில் மகிழ்ச்சி என்றும் உங்களுக்கும் உங்கள் தம்பி நிஷாத்துக்கும் வாழ்த்துக்கள் என்றும் சச்சின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+