குஜராத் தேர்தல்: பாஜகவே வெல்லும்.. டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்துக்கணிப்பு!
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 109 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும் என டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
மும்பை: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 113 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும் என டைம்ஸ் நவ் - விஎம்ஆர் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
22 ஆண்டுகளாக குஜராத்தில் தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து வருகிறது பாஜக. மோடி பிரதமரான பிறகு முதல்முறையாக சட்டசபை தேர்தலை சந்தித்துள்ளது.
எப்படியாவது இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இம்முறையாவது ஆட்சியை கைப்பற்றுவோமா என தீயாக வேலை செய்து வருகிறது காங்கிரஸ்.

18ஆம் தேதி முடிவு
குஜராத் சட்டசபைக்கு இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்கள் இன்றுடன் நிறைவடைந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

டைம்ஸ்நவ் - விஎம்ஆர் சர்வே
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை டைம்ஸ் நவ் - விஎம்ஆர் வெளியிட்டுள்ளது. அதன்படி குஜராத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
113 இடங்களை கைப்பற்றும்
182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மை ஆட்சியமைக்க 92 இடங்கள் தேவை. இந்நிலையில் பாஜக 113 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

காங்கிரஸ்க்கு 66 இடங்கள்
காங்கிரஸ் கட்சி 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறையும் காங்கிரஸ் கட்சி குஜராத்தில் ஆட்சியமைக்க முடியாது என்றும் அந்தக் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதரகட்சிகளுக்கு 3 இடங்கள்
குஜராத் சட்டசபைத் தேர்தலில் இதரக் கட்சிகள் 3 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ்வின் இந்த கருத்துக்கணிப்பு காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications