ஹரித்வாரில் அனல் பறக்கும் போட்டி.. பிரம்மச்சாரியிடம் "சிக்கிய" பாஜக முதல்வர் வேட்பாளர்.. காங். குஷி
உத்தரகாண்ட்: ஹரித்வாரில் பாஜக-வின் முதல்வர் வேட்பாளரை எதிர்த்து பலமான வேட்பாளரை களமிறக்கி இருக்கிறது காங்கிரஸ். இதனால் ஹரித்வாரில் பலத்த போட்டியை சந்திக்கவிருக்கிறது பாஜக.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 14-ம் தேதி நடக்கிறது. தற்போது முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக ஆட்சி உத்தரகாண்டில் நடைபெற்று வருகிறது.

உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகளை மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்தே, உத்தரகாண்டில் ஆளும் பாஜக-வும் எதிர்க்கட்சிகளும் தயாராகி வருகின்றன. 70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. 59 வேட்பாளர்களை கொண்ட முதலாவது பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில் காங்கிரசில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

பாஜக
ஹரித்வார் தொகுதியில் நான்கு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த மதன் கௌசிக்கை பாஜக முதல்வர் வேட்பாளராக களமிறக்கியுள்ளது. அதே தொகுதியில் காங்கிரஸ் ஹரித்வாரைச் சேர்ந்த சத்பால் பிரம்மச்சார்யாவை போட்டியிடவைத்துள்ளது. ஹரித்வார் நகர்ப்புற முன்னாள் தலைவராக சத்பால் பிரம்மச்சாரி இருந்தபோது, ஹரித்வாரில் காங்கிரஸ் எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகளைப் பெற்றது.

காங்கிரஸ்
ஹரித்வாரில் பாஜக-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது. ஹரித்வாரில் சத்பால் பிரம்மச்சாரிக்கு சீட் வழங்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 2017 -ல் சத்பால் பிரம்மச்சாரிக்குப் பதிலாக ஹரித்வாரில் வேறொருவரை களமிறக்கியது காங்கிரஸ். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அப்போது மதன் கௌசிக்கின் வெற்றி எளிதானது.

ஹரித்வார் போட்டி
2007-ல் மதன் கௌசிக்கால், காங்கிரஸ் வேட்பாளர் ஷர்மா தோற்கடிக்கப்பட்டார். அதுவும் சுமார் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். வேட்பாளரைத் தவறாக களமிறக்கியதுதான் காரணம் என ஹரித்வார் காங்கிரஸ் தெரிவித்தது. ஆனால், இந்த முறை சத்பால் களமிறக்கப்பட்டிருக்கிறார். இதனால் காங்கிரஸ் தரப்பு சந்தோஷத்தில் இருக்கிறது.

சவால்
"மதன் கவுசிக் சமீபத்தில் ஹரித்வாருக்கு நிறைய பணிகளைச் செய்துள்ளார். அவர் மின்சார கேபிள்கள் மற்றும் எரிவாயு குழாய்களுக்கு மின்சாரம் வழங்க உதவியுள்ளார்'' அதனால் மதன் வெற்றி பெறுவார் என பாஜக தரப்பு சொல்கிறது. ஆனால், காங்கிரஸ் தரப்போ, ஆளும் பாஜக-வுக்கு எதிராக பலமான எதிர் அலை அடிக்கிறது. அதனால் இங்கு மதன் கெளசிக் வெற்றி பெறுவது கடினம் தான் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications