முந்திரிப் பருப்பை விட கொஞ்சம் "பெருசு"... என்ன செய்யலாம்?... டிப்ஸ் தரும் 90 வயது டாக்டர்!!
மும்பை: மும்பையைச் சேர்ந்த 90 வயது டாக்டர் மஹீந்தர் வத்சா, மும்பையின் டாக்டர் மாத்ருபூதமாக வலம் வருகிறார். 90 வயதிலும் அவர் மும்பை மிர்ரல் பத்திரிகைக்காக ஒரு காலம் எழுதி வருகிறார். அந்தப் பகுதியில் செக்ஸ் தொடர்பாக கேட்கப்படும் விதம் விதமான வித்தியாசமான கேள்விகளுக்கும் அழகாக, எளிமையாக பதில் கூறி வருகிறார் டாக்டர் வத்சா.
தினசரி காலையில் எழுந்ததும் இந்த கேள்விகளுக்குப் பதில் எழுதும் வேலையில் உட்கார்ந்த விடுகிறார் வத்சா. ஒரே மாதிரியான கேள்விகளை அவர் பலமுறை பார்த்து விட்ட போதிலும் கூட முகம் சுளிக்காமல், அலுக்காமல், சளைக்காமல் பதில் தருகிறார்.
இவரது இத்தனை கால அனுபவத்தில் அவர் தெரிந்து கொண்டது என்னவென்றால், செக்ஸ் குறித்த விழிப்புணர்வு நம்மவர்களிடையே சற்று குறைவு என்பதுதான்.

அரபிக் கடலோரம்
மும்பையில், அரபிக் கடலைப் பார்த்தாற் போல இருக்கிறது டாக்டர் வத்சாவின் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு. இதமான தென்றல் காற்று ஜன்னலைத் தொட்டுத் தழுவியபடி இருக்கிறது 24 மணி நேரமும்.

தள்ளாடும் தேகம்.. வந்து குவியும் சந்தேகம்
வத்சாவின் வயதுதான் தள்ளாட்டமாக இருக்கிறதே தவிர அவரது உழைப்பிலும், சிந்தனையிலும் அது இல்லை. தன்னிடம் வந்து குவியும் செக்ஸ் குறித்த சந்தேகங்களை நிதானமாகப் படித்துப் பார்த்து புரிவது போல பதிலைத் தருகிறார்.

எப்படியெல்லாம் சந்தேகங்கள்....
அவருக்கு வந்த கடிதத்தில் இப்படி ஒரு சந்தேகம்.." எனது நண்பன் ஒருவன் நான் குளித்துக் கொண்டிருக்கும்போது என்னைப் பார்த்துள்ளான். அப்போது எனது ஆணுறுப்பைப் பார்த்த அவன், இது முந்திரிப் பருப்பை விட கொஞ்சம்தான் பெரிதாக உள்ளது என்று கூறி விட்டான். எனது ஆணுறுப்பை பெரிதாக்க ஏதாவது வழி உள்ளதா..."

ஒரே நேரத்தில்..
இன்னொரு கேள்வி இது.. " ஒரு ஆணும், பெண்ணும், ஒரே நேரத்தில் இணைந்து சுய இன்பம் அனுபவித்தால் கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளதா..."

ஆண் கருத்தரிக்க வாய்ப்புள்ளதா...
இன்னும் ஒரு கேள்வி... " ஒரு ஆணின் பின்புறத்தில் உறவு கொள்வதன் மூலம் அந்த ஆண் கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளதா....?"

சளைக்காமல் பதில்
இப்படிப்பட்ட கேள்விகள் அவருக்கு முகச் சுளிப்பை ஏற்படுத்துவதில்லை. மாறாக, கேட்டவர்களின் தர்மசங்கடத்தையும், சந்தேகத்தையும் சுத்தமாக போக்கும் வகையில் பதில் தருகிறார். அதிலும் ஜாலியான முறையில்.

இப்படி இருந்தா நீங்க பாஸ்.. பாஸ்!
ஆண்குறியின் நீளம் குறித்த சந்தேகத்திற்கு இவர் தரும் அழகான விளக்கத்தைப் பாருங்கள்... "உங்களது ஆணுறுப்புக்கு மேலே உள்ள இடுப்பு எலும்புப் பகுதியிலிருந்து ஆண் குறியின் நுனி வரை ஒரு டேப்பை எடுத்து அளந்து பாருங்கள். அது இரண்டரை இன்ச்சுக்கு மேல் இருந்தால்.. உங்களால், உங்களது பார்ட்னரை சந்தோஷமாக திருப்திப்படுத்த முடியும்...".

40 வருடமாக
செக்ஸ் குறித்த சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பதை கடந்த 40 வருடமாக செய்து வருகிறாராம் டாக்டர் வத்சா. இதுவரை இவருக்கு 40,000 கடிதங்கள் வந்துள்ளதாம். பெரும்பாலானவை அடிப்படை சந்தேகங்கள்தான் என்று கூறுகிறார் வத்சா.

கூகுள் சர்ச்சில் போய் தேடலாமே
மிகவும் அடிப்படையான கேள்விகள் கேட்பவர்களுக்கு இவர் கூறும் பதில் - கூகுள் சர்ச்சில் போய்ப் பாருங்கள். நிறைய இருக்கிறது. நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்பதுதான்.

சொல்லித் தருவதில்லை
நமக்குத் தெரிந்த செக்ஸ் குறித்த தகவல்களை, அறிவை, ஞானத்தை பலரும் தங்களுடனேயே வைத்துக் கொள்கின்றனர். இது தவறு. இது அப்படியே பாஸ் ஆகிச் செல்ல வேண்டும். அப்போதுதான் அறிவார்ந்த, ஆரோக்கியமான சமூகமாக நாம் வளர முடியும்.

"கன்னி"ப் பெண்களைக் காப்பவர்...
இவரிடம் திருமணத்திற்கு முன்பே உறவு கொண்டு பின்னர் திருமணத்தின்போது அதை நினைத்துப் பயப்படும் பல பெண்கள் வருவார்களாம். அவர்களுக்கு இவர் கூறும் ஆலோசனை, கன்னித் திரையை அறுவைச் சிகிச்சை மூலம் முதலில் இணையுங்கள். முதலிரவின்போது சத்தம் காட்டாமல் முதல் முறையாக உறவில் ஈடுபடுவது போல நடந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களது திருமண உறவு காக்கப்படும் என்பதே.

தாத்தாக்களுக்கும் கூட
இளம் பெண்கள், ஆண்களுக்குத்தான் என்றில்லை, 60, 70 வயதானோரும் கூட வத்சாவிடம் செக்ஸ் சந்தேகம் குறித்துக் கேட்டு அணுகுகிறார்களாம்.












Click it and Unblock the Notifications