இந்திய மார்க்கெட்டில் அடுத்த மாதம் கால்பதிக்கிறது ஆப்பிளின் 'ஐபோன்6'! விலை பட்டியல் வெளியீடு!!
டெல்லி: அமெரிக்காவில் நேற்று அறிமுகமான ஐபோன்6 மற்றும் ஐபோன்6 பிளஸ் மாடல்கள் தீபாவளி சீசனில் இந்திய மார்க்கெட்டில் கால்பதிக்க உள்ளன.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே ஐபோன்6 மற்றும் ஐபோன்6 பிளஸ் ஆகிய இரு மாடல் செல்போன்களை அமெரிக்காவில் நேற்று ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் அறிமுகம் செய்து வைத்தார். அமெரிக்காவில் அதிகாரப்பூர்வ விற்பனை வரும் 19ம்தேதி தொடங்க உள்ளது.

வாடிக்கையாளர்கள் ஆர்வம்
இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு மேல் இந்த அறிமுகம் நிகழ்ந்தாலும், கண்விழித்து பலரும் இரு போன்களையும் நேரடி ஒளிபரப்பில் பார்த்தனர். போன்களுடன் நவீன வாட்ச் ஒன்றையும் ஆப்பிள் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது.

இரு மாடல்கள்
கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வந்துள்ள இந்த 'ஐபோன் 6' மற்றும் 6பிளஸ் மாடல்கள் 4.7 மற்றும் 5.5 அங்குலத்தில் கிடைக்கின்றன. இதில் 128 ஜி.பி., மெமரி உள்ளது சிறப்பு. அமெரிக்காவில் சந்தைக்கு வந்துள்ள ஐபோனின் புதிய மாடல் இந்தியாவுக்கு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு இன்று விடை கிடைத்துள்ளது.

அடுத்த மாதம் 17ம்தேதி
ஐபோன்6 மற்றும் ஐபோன் 6பிளஸ் ஆகியவை அக்டோபர் 17ம்தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விலை என்ன தெரியுமா?
4.7 இன்ச் ஸ்கிரீன் கொண்ட ஐபோன்6 மாடலின் 16 ஜிபி மெமரி கொண்ட போன்கள் இந்திய சந்தையில் ரூ.53,500க்கும், 64 ஜிபி மெமரி கொண்ட போன்கள் ரூ.62500க்கும், 128 ஜிபி மெமரி கொண்ட போன்கள் ரூ.71,500க்கும் கிடைக்க உள்ளது.

ஐபோன்6 பிளஸ்
5.5 இன்ச் ஸ்கிரீன் அளவு கொண்ட ஐபோன்6 பிளஸ், மாடல் போனின் விலை இந்தியாவில் ரூ.62,500லிருந்து தொடங்க உள்ளது. இதில் 16 ஜிபி மெமரி இருக்கும். அதே நேரம், 64 ஜிபி மெமரி கொண்ட பிளஸ் போன் ரூ.71,500க்கும், 128 ஜிபி கொண்ட போன்கள் ரூ.80,500க்கும் விற்பனையாக உள்ளன.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications