பயங்கரம்.. அப்னி பார்ட்டி கட்சி நிர்வாகி குலாம் ஹசன் சுட்டுக்கொலை.. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு
குலாம் ஹசனை ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், அப்னி பார்ட்டி கட்சியின் நிர்வாகியான குலாம் ஹசனை தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர்.
ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சியின் மண்டல தலைவராக இருந்தவர் குலாம் ஹசன்.. குல்காம் தேவ்சர் நகரில் வசித்து வருகிறார்..
இந்நிலையில், நேற்று சாயங்காலம் அவருக்கு வீட்டுக்குள், திடீரென புகுந்த பயங்கரவாதிகள் அவரை துப்பாக்கியாலேயே சுட்டுள்ளனர்.

ரத்த வெள்ளம்
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த குலாம் ஹசனை, உடனடியாக மீட்டு குடும்பத்தினர் சிகிச்சைக்காக அனுமதிக்க முயன்றனர்.. ஆனால், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குலாம் ஹசன் உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. குலாம் ஹசன் படுகொலைக்கு தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாட்டு கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன..

படுகாயம்
இப்படித்தான் சில தினங்களுக்கு முன்பும், ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் டிரால் பகுதியில் லர்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் திடீரென பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.. இதில் ஒருவர் இறந்துவிட்டார்.. பலர் படுகாயமடைந்தனர்.

பயங்கரவாதிகள்
2 நாளைக்கு முன்பும், அதேமாவட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஜாவேத் அகமதுதார் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.. அதேபோல, கடந்த 9-ம் தேதியும் லக்ஷர் ஏ-தொய்பா பயங்கரவாதிகள் 2 பேர் பேர் பாஜக ஊராட்சி தலைவரின் வீட்டுக்குள் புகுந்து அவரையும், அவர் மனைவியையும் சுட்டுக் கொன்றனர்.. இதன் தொடர்ச்சியாக இப்போது, குலாம்ஹசனை கொன்றுள்ளது மேலும் பரபரப்பை கூட்டி உள்ளது.

ராணுவ வீரர்கள்
இதையடுத்து, ரஜோரி மாவட்டத்தில் உள்ள தன்னா கிராமத்தின் காட்டுப்பகுதியில் ராணுவ வீரர்கள், உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்... அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் வீரர்கள் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்... வீரர்களும் இதற்கு பதிலடி தந்தனர்.. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுவீழ்த்தப்பட்டார்... அதேபோல ராணுவ ஜுனியர் அதிகாரி ஒருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications