கேரளாவில் பயங்கரம்... ஒருதலை காதலால் மாணவி தீ வைத்து எரிப்பு- முன்னாள் மாணவரின் வெறிச்செயல்!

கேரள மருத்துவக் கல்லூரி வகுப்பறையில் மாணவியை முன்னாள் மாணவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் இரண்டுபேரும் பரிதாபமாக உயிரழந்தனர்.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மருத்துவக்கல்லூரி வகுப்பறையில் சக மாணவ, மாணவிகள் முன்னிலையில் ஒரு மாணவி மீது முன்னாள் மாணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததோடு தானும் தீவைத்துக்கொண்டார். இதில் 2 பேரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழ்ந்தனர்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரசெயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆதர்ஷ்.

இக்கல்லூரியில் கொல்லம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற மாணவி 3ஆம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட் படித்து வந்தார். இந்நிலையில் முன்னாள் மாணவர் ஆதர்ஷ் நேற்று கல்லூரிக்கு வந்துள்ளார்.

In Kerala former student set fire a girl in class room front of all the students in Medical college

வகுப்பறைக்குள் நுழைந்த முன்னாள் மாணவர்

அப்போது ஒரு வகுப்பறைக்குக்குள் நுழைந்த ஆதர்ஷ் அனைத்து மாணவ, மாணவிகள் முன்னிலையில் அங்கிருந்த லட்சுமி மீது பெட்ரோலை ஊற்றியுள்ளார். பின்னர் தானும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டுள்ளார். சூழ்நிலையை உணர்ந்த லட்சுமி வகுப்பறையில் இருந்து தப்ப முயன்றுள்ளார்.

மாணவி தீ வைத்து எரிப்பு

அவரை துரத்திச்சென்ற அந்த இளைஞர் தான் வைத்திருந்த லைட்டரைக் கொண்டு லட்சுமியின் ஆடையை பற்ற வைத்துள்ளார். பின்னர் தன் மீதும் தீவைத்துக் கொண்டுள்ளார்.

அதிர்ச்சியில் உறைந்த மாணவ, மாணவிகள்

இதனைக் கண்டு சக மாணவ, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். சிலர் தீயை அணைக்க முயன்றர். இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காப்பாற்ற முயன்ற சில மாணவர்களும் லேசான காயமடைந்தனர்.

அடுத்தடுத்து பலியான சோகம்

இந்நிலையில் முன்னாள் மாணவர் ஆதர்ஷும் மாணவி லட்சுமியும் சிகிச்சைப் பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒருதலைக் காதலால் வெறிச்செயல்

இதில் முன்னாள் மாணவரான ஆதர்ஷ் கல்லூரி அருகே பேன்சி கடை நடத்தி வந்ததும் அவர் மாணவி லட்சுமியை ஒரு தலையாக காதலித்ததும் தெரிய வந்துள்ளது. ஆதர்ஷின் காதலை ஏற்கமறுத்த மாணவி லட்சுமி நட்பாகத்தான் பழகியதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆதர்ஷ் லட்சுமியை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி மாணவியை எரித்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+