லோக்சபா:மோடிக்கு அருகே 2-வது இடத்தில் அத்வானிக்கு இருக்கை! 'பேக்பெஞ்ச்'-ல் ராகுலுக்கு இடம்!!
டெல்லி: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அருகில் மத்திய அரசில் எந்த பதவியும் வகிக்காத பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு 2வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு பின்வரிசை இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றதும் லோக்சபா கூட்டத் தொடரில் இன்று முதல் முறையாக கலந்து கொண்டார். அவரது இருக்கைக்கு அருகில் 2-வது இடத்தில் அத்வானிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு அதில் அவர் அமர்ந்து இருந்தார்.

அத்வானி மத்திய அமைச்சராகவோ அல்லது எந்த அரசு பதவியிலும் இல்லை. எம்.பி.யாக மட்டுமே இருக்கிறார். இருந்தாலும் அவருக்கு 2-வது இடத்தில் இருக்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அவரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், வெங்கையாநாயுடு, ராம்விலாஸ் பஸ்வான், முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.
எதிர்க்கட்சி வரிசையில் சோனியா அமர்ந்து இருந்தார். அவருக்கு அருகில் மல்லிகார்ஜுன கார்கே, வீரப்ப மொய்லி அமர்ந்து இருந்தனர். மற்றொரு எதிர்க்கட்சி வரிசையில் சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், அ.தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் தம்பித்துரைக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பின்வரிசை இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications