ரூ.81,000 இருந்த பையை பறித்து போன குரங்கு! ‘டெபாசிட்' செய்ய போனவருக்கு நேர்ந்த கதி! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் ரூ.81 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு ஒருவர் வங்கியில் 'டெபாசிட்' செய்ய சென்றார். அப்போது திடீரென்று வந்த குரங்கு அவரிடம் இருந்த பணப்பையை பறித்து கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

in-shimla-monkey-snatched-a-packet-containing-rs-81-000-from-a-man-and-scaatterredthe-cash-everywher
Photo Credit:

குரங்குகள் உள்ள பகுதிகளுக்கு பயணம் செய்தால் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக நம்மிடம் உள்ள உடைமைகளை கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் குரங்குகள் அதனை எடுத்து சென்று விடும்.

நம்மில் பலரும் கூட திண்பண்டங்கள் முதல் பிற உடைமைகளை குரங்கிடம் இழந்து இருக்கலாம். ஆனால் இங்கே ஒருவர் வங்கியில் சேமித்து வைக்க எடுத்து சென்ற ரூ.81 ஆயிரத்தை குரங்கிடம் பறிகொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் இமாச்சல பிரதேச மாநிலம் தலைநகர் சிம்லாவில் நடந்து. அங்குள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அருகே வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் 'டெபாசிட்' செய்வதற்காக ஒருவர் தனது ரூ.81 ஆயிரத்தை எடுத்து சென்றார். அந்த பணத்தை அவர் பையில் வைத்து கொண்டு சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக குரங்கு ஒன்று வேகமாக வந்து அவர் வைத்திருந்த பையை பறித்து சென்றது. பை நிறைய கட்டுக்கட்டாக பணம் இருந்ததால் அந்த நபர் பதறிப்போனார். குரங்கை துரத்தி சென்று எப்படியாவது பணப்பையை மீட்க நினைத்தார்.

ஆனால் அவரது முயற்சி கைக்கூடவில்லை. பணப்பையை பறித்து சென்ற குரங்கு அருகே உள்ள மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டது. பிறகு பையை திறந்து அதில் இருந்த பணக்கட்டுகளை வெளியே எடுத்து ஒவ்வொன்றாக கீழே வீசியது. இதனால் பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் குரங்கிடம் இருந்து அனைத்து பணத்தையும் கைப்பற்றி உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும்என்று நினைத்தனர்.

ஒவ்வொரு நோட்டுகளாக குரங்கு மரத்தில் இருந்து கீழே வீசவீச அங்கிருந்தவர்கள் அதனை சேகரித்து உரியவரிடம் ஒப்படைத்தனர். இருப்பினும் சில ரூபாய் நோட்டுகள் அங்கிருந்த பள்ளத்துக்குள் விழுந்தது. கடைசியாக அங்கிருந்தவர்களின் உதவியுடன் குரங்கு பறித்து சென்ற ரூ.81 ஆயிரத்தில் ரூ.1,500 மட்டுமே மிஸ்ஸானது. சில ரூபாய் நோட்டுகள் கிழிந்து இருந்தது. மற்றப்படி பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் அவருக்கு கிடைத்தது. இதனால் அவர் ஹேப்பியானார்.

இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் குரங்கு பணத்தை வீசுகிறது என்று அதனை எடுத்து செல்லாமல் உரியவரிடம் அதனை ஒப்படைத்த செயலை பாராட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+