அடேங்கப்பா.. இம்புட்டு பேரா.. ஆட்டோவுக்குள் எட்டி பார்த்து அதிர்ச்சி ஆன போலீஸார்!
ஒரே ஷேர் ஆட்டோவில் 24 பேர் பயணம் செய்த வீடியோ வைரலாகிறது
Recommended Video
புவனகிரி: வடிவேலு ஒரு படத்துல, ரோட்டில போற வர்றவங்களை எல்லாம் ஷேர் ஆட்டோவுக்குள் புடிச்சி ஏற்றி விட்டு உள்ளே தள்ளுவாரே.. அப்படி யாராவது செய்தார்களா என்று தெரியவில்லை.. ஒரே ஷேர் ஆட்டோவுக்குள்.. ஒரே சமயத்தில் மொத்தமாக 24 பேரை பார்த்ததும் போலீசார் ஆடிப்போய் விட்டனர்.
புவனகிரி அருகே ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் கல்யாணம் ஒன்றிற்கு கிளம்பி சென்றுள்ளனர். இவர்கள் மொத்தம் 24 பேர். ஒரே ஷேர் ஆட்டோவில் கும்பலாக போய்விட்டு, திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

வழக்கமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், வந்து கொண்டிருந்த அந்த ஆட்டோவை நிறுத்தினர். யதார்த்தமாகத்தான் உள்ளே எட்டிபார்த்தனர்.
ஒரு கிராமமே உள்ளே உட்கார்ந்து இருப்பதை பார்த்து அதிர்ந்து விட்டனர். ஒவ்வொருவராக கீழே இறங்கினர். ஒவ்வொரு தலையாக எண்ணினர்.. மொத்தம் 24 தலை.. ஒரு ஷேர் ஆட்டோவில் 12 பேருக்கு மேல் ஏற்றக்கூடாது என்பது விதி. மீறினால் ஃபைன்தான்.
இதனால் ஆட்டோ டிரைவரை கடுமையாக போலீசார் எச்சரித்ததுடன், விதிப்படி ஃபைன் போட்டார்கள். அளவுக்கு அதிகமாக இப்படி ஆட்களை ஏற்றி செல்ல கூடாது என்பதை பொதுமக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதற்காகவே, இதனை செல்போனில் வீடியோ எடுத்த போலீசார் அதனை இணையத்திலும் பதிவிட்டுள்ளனர்.
பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், இதுபோன்று சட்டவிரோதமாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த வீடியோ வைரலாகி மக்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது. ஷேர் ஆட்டோ என்றாலே சென்னைதான் பேமஸ்.. இப்போது தெலுங்கானாவின் இந்த "24 பேர் டிரிப்" அதை முறியடித்து வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications