Today's Chanakya Exit polls: சத்தீஸ்கரில் பாஜகவுக்கு கண்ணிவெடி! கை சின்ன பொத்தானை அழுத்திய மக்கள்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 57 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைக்கும் என டுடேஸ் சாணக்யா எக்ஸிட் போலில் வெளியாகியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சில தொகுதிகளில் நக்ஸலைட் ஆதிக்கம் உள்ளன. இதனால்தான் இங்கு 90 தொகுதிகளே இருந்தாலும் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த இரு தேர்தல்களிலும் மொத்தம் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலில் பாஜக காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
மொத்தம் 90 தொகுதிகளில் 15 தொகுதிகளில் நட்சத்திர போட்டியாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த மாநிலத்தில் முக்கிய பிரச்சினைகளாக ஊழல், விவசாயிகளின் பிரச்சினை, பழங்குடியினர் பிரச்சினை , நக்ஸலைட்டுகள் பிரச்சினை ஆகியவை ஆகும்.
இங்கு முதல் கட்ட தேர்தலின் போதே சுக்மா மாவட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை சில செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
அதன்படி டுடேஸ் சாணக்யா கணிப்பின்படி பாஜக 33 இடங்களிலும், காங்கிரஸ் 57 இடங்களிலும் வெல்லும். அதாவது இந்த முறை காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடிக்கும். முட்டி மோதிய பாஜகவுக்கு தோல்வியே விஞ்சும். வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் லோக்சபா தேர்தலுக்கு இந்த தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இது ஒவ்வொரு கட்சிக்கான செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications