சுற்றுலா சென்ற இடத்தில் காணாமல்போன மூதாட்டி..குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த "கூகுள் ட்ரான்ஸ்லேட்"
டேராடூன்: உத்தரகாண்டிற்கு சுற்றுலா சென்ற போது குடும்பத்தினரிடம் இருந்து வழி தவறிய வயதான பெண் ஒருவர் அங்குள்ள மொழியும் தெரியாமல் தவித்து இருக்கிறார். கூகுள் டிரான்ஸ்லேட் உதவியால் அந்த வயதான பெண்ணை போலீசார் அவருடைய குடும்பத்தினரிடம் சேர்த்து இருக்கின்றனர்.
தகவல் தொழில்நுட்பத்தால் ஒரு சில சிக்கல்கள் இருந்தாலும் எண்ணிலடங்கா பயன்கள் மனித சமூகத்திற்கு கிடைப்பதை மறுக்க முடியாது. எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அடுத்த நொடியே அவர்களை தொடர்பு கொண்டு பேசுவதை சாத்தியம் ஆக்கியது தகவல் தொழில்நுட்பம் தான்.

அதேபோல் தற்போது வழி தெரியாத ஊருக்கு கூட ஒரு போன் கையில் இருந்தால் போதும், தைரியாமக சென்று விட்டு விடலாம். உள்ளூர் காரர்களுக்கே தெரியாத ஷார்ட் ரூட்களை கூகுள் கனக் கச்சிதமாக பிடித்து கொடுத்து விடுகிறது என்று சொல்லும் அளவுக்கு துல்லியமாக வழியை சொல்லிவிடுகிறது.
அதேபோல், மொழி தெரியாமல் அவதிப்பட்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது என்று சொல்லும் அளவிற்கு தற்போது கூகுள் டிரான்ஸ்லேட் போன்றவற்றால் எந்த மொழியில் வார்த்தைகள் இருந்தாலும் அதை அப்படியே நமக்கு தெரிந்த மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை.... சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.
உத்தரகாண்டில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற 68-வயதான மூதாட்டி ஒருவர் தனது குடும்பத்தை பிரிந்து விட்டார். வழி தெரியாமல் தடுமாறிய அவருக்கு கூகுள் டிரான்ஸ்லேட் பெரிதும் உதவியாக இருந்து இருக்கிறது. அது எப்படி என்ற விவரத்தை பார்ப்போம்:

ஆந்திர மாநிலத்தை சேர்ர்ந்த குடும்பத்தினர் உத்தரகாண்டின் கேதர்நாத்திற்கு வருகை தந்துள்ளனர். கேதர்நாத்திற்கு மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்ததுள்ளது. அங்கு இருந்த மோசமான வானிலையால் எப்படியோ தனது குடும்பத்தினரை விட்டு அந்த மூதாட்டி பிரிந்து விட்டார். தெலுங்கு மட்டுமே பேச தெரிந்த அவருக்கு வேறு எந்த மொழியும் தெரியாது.
மொழி தெரியாத ஊரில் சிக்கிக் கொண்டு தனது குடும்பத்தினரை எப்படி தொடர்பு கொள்வது..யாரிடம் என்ன உதவி கேட்பது என்று கூட தெரியாமல் தடுமாறியிருந்து இருக்கிறார். குழப்பமான மனநிலையில் சுற்றிக் கொண்டு இருந்த மூதாட்டியை கவனித்த அங்குள்ள போலீசார் அவரிடம் விசாரித்து இருக்கின்றனர்.
ஆனால், போலீசார் கேட்பதை அந்த மூதாட்டியால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல், மூதாட்டி பேசுவதையும் போலீசருக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போதுதான் போலீசாருக்கு பொறி தட்டியிருக்கிறது. கூகுள் டிரான்ஸ்லேட் உதவியால் அவர் பேசும் மொழி என்ன என்பதையும் என்ன பேசுகிறார் என்பதையும் கண்டுபிடித்துவிடலாம் எனக் கருதி அதை முயற்சித்து இருக்கிறார்.
போலீசார் நினைத்தது போலவே மூதாட்டி பேசியதை வைத்து அவரின் குடும்பத்தினர் எங்கு வந்தனர் போன்ற விவரங்களை கூகுள் டிரான்ஸ்லேட் உதவியால் புரிந்து கொண்டனர். அதன்பிறகு குடும்பத்தினரை தொடர்பு கொண்டு வெற்றிகரமாக மூதாட்டியை சேர்த்தனர்












Click it and Unblock the Notifications