ரூ.27 கோடி வரி கட்டாமல் டிமிக்கி தந்த லுலு மால்.. வங்கி கணக்கு போச்சே.. முடக்கிய வருமான வரித்துறை
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் செயல்பட்டு வரும் லுலு மால் ரூ.27 கோடி வருமான வரி செலுத்தாமல் இழுத்தடித்து வந்தது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் லுலு மால் நிர்வாகம் கண்டுக்கொள்ளாமல் இருந்த நிலையில் அதன் வங்கி கணக்கு அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிரபலமான லுலு மால் செயல்பட்டு வருகிறது. இந்த மால் நிர்வாகம் சார்பில் ரூ.27 கோடி வருமான வரியாக செலுத்த வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை செலுத்தும்படி லுலு மால் நிர்வாகத்துக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் லுலு மால் நிர்வாகம் ரூ.27 கோடி வரியை திரும்ப செலுத்தவில்லை. இதனால் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி லுலு மாலுக்கான அதிகாரப்பூர்வ வங்கி கணக்கை வருமான வரித்துறை அதிரடியாக முடக்கம் செய்தது. இதன்மூலம் அந்த வங்கி கணக்கில் இருந்து லுலு மால் நிர்வாகத்தால் இனி பணத்தை எடுக்கவோ, மாற்றவோ முடியாது. இருப்பினும் குறிப்பிட்ட அந்த வங்கி கணக்கிற்கு தொடர்ந்து பணம் அனுப்ப முடியும். அந்த பணத்தை வருமான வரித்துறை வரி பாக்கிற்காக எடுத்து கொள்ளும்.
லுலு மால் பிரபலமான லுலு குரூப் இன்டர்நேஷனல் நிறுவனத்தை சேர்ந்தது. இந்த நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியை தலைமையிடமாக கொண்டு பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சில்லறை வர்த்தக துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நிறுவனங்களின் செயின் பிசிஸ் சங்கிலியை இயக்கி வருகிறது.
இந்த லுலு குழுமத்தின் தொழில் நம் நாட்டில் கேரளா மாநிலம் கொச்சியை தலைமையிடமாக பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் கேரளா மாநிலம் நாட்டிகாவை சேர்ந்த எம்ஏ யூசுப் அலி தான் இருக்கிறார். கேரளாவில் பிறந்த இவர் தனது தாய்மாமா அபுதாபியில் இருந்ததால் அங்கு சென்று தொழில் தொடங்கினார். இப்போது உலகளவில் பெரிய பிராண்டாக இந்த லுலு குரூப் இன்டர்நேஷனல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
நம் நாட்டில் கேரளாவின் கொச்சியில் முதல் முறையாக லுலு மால் தொடங்கப்பட்டது. அதன்பிறகு திருவனந்தபுரம், பெங்களூர், லக்னோ, கோழிக்கோடு, பாலக்காடு, திரிச்சூர், தமிழகத்தில் கோவை உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இதுதவிர சென்னை, குஜராத்தின் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் லுலு மாலுக்கான பணிகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications