ராஜஸ்தானில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரிதுறை அதிகாரி கைது
ராஜஸ்தானில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ 24 லட்சம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் வினய்குமார். அவர் ஆய்வுக்கு சென்ற போது ஒருவரிடம் வருமான வரி தொடர்பான பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி, அதற்காக தனக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். சி.பி.ஐ. அதிகாரிகளின் ஏற்பாட்டின் பேரில் அந்த நபர், வினய் குமாரிடம் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக ரூ.1 லட்சத்தை வழங்கினார்.
அப்போது மறைந்து இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள், வினய் குமாரை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ரூ 24 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வினய் குமார் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications