டி 20ல் புறக்கணித்த கோலி.. ரோஹித்துக்கு கீழ் சொல்லி அடித்த அஸ்வின் 2.0.. ஆட்டத்தை மாற்றிய அந்த ஓவர்
ஜெய்ப்பூர்: டி 20 கிரிக்கெட் போட்டிகளில் அஸ்வின் மீண்டும் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். இந்திய அணியில் மீண்டும் லிமிட்டட் ஓவர் போட்டிகளில் அஸ்வின் அதிக அளவில் வாய்ப்புகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்து ஆடி வருகிறது.
தொடக்கத்திலேயே இந்திய அணி விக்கெட் எடுத்து நியூசிலாந்தை கட்டுப்படுத்தியது. அதன்பின் மீண்டும் வந்த நியூசிலாந்து பின்னர் மீண்டும் டெத் ஓவர்களில் திணறி வருகிறது.

அஸ்வின்
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா களமிறங்கி உள்ளார். கோலி கேப்டனாக இருந்த வரை இந்திய அணியில் லிமிடட் ஓவர்களில் அஸ்வினுக்கு வாய்ப்பே பெரிதாக வழங்கப்படவில்லை. முக்கியமாக டி 20 போட்டிகளில் அஸ்வின் 4 வருடமாக வரிசையாக புறக்கணிக்கப்பட்டார். 4 வருடமாக வாய்ப்பே கொடுக்கப்படவில்லை.

வாய்ப்பு
தொடர்ந்து அஸ்வினை தவிர மற்ற ஸ்பின் பவுலர்களுக்கு வாய்ப்பு வழங்கி கோலி இவரை புறக்கணித்துக்கொண்டே இருந்தார். இதையடுத்து 2021 டி 20 உலகக் கோப்பை தொடரில் ஒருவழியாக அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் ஆடும் அணியில் அஸ்வினுக்கு கோலி வாய்ப்பு தரவில்லை. 2021 டி 20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைத்த போட்டியில் அஸ்வின் நன்றாகவே பவுலிங் செய்தார்.

ரோஹித்
இந்த நிலையில் அஸ்வினுக்கு ரோஹித் கேப்டன்சிக்கு கீழ் மீண்டும் இன்று வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் முக்கியமான நேரத்தில் அஸ்வினுக்கு மிடில் ஓவர்களில் நியூசிலாந்துக்கு எதிராக வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை பயன்படுத்திக்கொண்டு அஸ்வினும் நன்றாக பவுலிங் செய்தார். அதிலும் அஸ்வின் மீது எந்த அளவிற்கு ரோஹித் நம்பிக்கை வைத்து இருந்தார் என்றால்.. அஸ்வினுக்கு ஏற்றபடி ஸ்லிப் பீல்டிங் செட் செய்தார்.

குறை
அஸ்வின் எப்போது முதல் ஸ்லிப்பை விரும்புவார். கேரம் பால் வீசும் போது ஸ்லிப் இருப்பதனை அஸ்வின் விரும்புவார். அதற்கு ஏற்றபடியே இன்று ரோஹித் கச்சிதமாக இன்று பீல்டிங் செட்டப் செய்தார். அதன்படி இன்று 14வது ஓவரில் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். 13.2 ஓவரில் சாப்மேன் விக்கெட்டை எடுத்தார். ஆப் பிரேக் பந்தை டாஸ் செய்து அஸ்வின் வீசியதில் சாப்மேன் போல்ட் ஆனார். இதுதான் ஆட்டத்தை மாற்றியது.

மாறியது
சாப்மேன் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார். இவர் 63 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்த ஓவரில்தான் ஆட்டம் மொத்தமாக மாறியது. பின் அதே ஓவரில் ரோஹித் அஸ்வினுக்கு ஸ்லிப் வைத்தார். 13.5வது ஓவரில் கிளைன் பிலிப்ஸ் டக் அவுட் ஆனார். அஸ்வின் துல்லியமாக வீசிய கேரம் பாலில் பிலிப்ஸ் அவுட் ஆனார்.

2 விக்கெட்
இதன் மூலம் 4 ஓவர் வீசிய அஸ்வின் 2 விக்கெட் எடுத்து வெறும் 23 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அஸ்வினின் டாப் ஓவராக இது இருந்தது. அஸ்வின் டி 20 போட்டிகளில் தனது 2.0 பவுலிங்கை இன்று வீசினார். இதனால் லிமிடட் ஓவர் அணிக்குள் இவருக்கு வரும் காலத்தில் அதிக அளவில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications