Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோலியாக இருந்தால் கோட்டை விட்டிருப்பார்! 'கைவிட்டு போன' மேட்சை கலக்கலாக ஜெயித்த கேப்டன் ரோகித் சர்மா

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: என்னதான் தோனி சொந்த ஊர் ராஞ்சியில் சிஷ்யன் ரிஷப் பண்ட், அவரை போலவே சிக்சர் விளாசி நியூசிலாந்தை பினிஷ் செய்திருந்தாலும், 2 போட்டிகளில் வென்று கோப்பையை கைப்பற்றியிருந்தாலும் இந்திய அணியில் ஒரு தடுமாற்றம் இருப்பதை மறுக்க முடியாது. பல நேரங்களில் அது அப்பட்டமாக தெரிந்தது.

Recommended Video

    New Zealand Batting-ஐ கட்டுபடுத்த Rohit Sharma போட்ட திட்டம்

    ரோகித் சர்மாவிற்கு ஒரு ராசி இருக்கத்தான் செய்கிறது என்பதைப் போல நேற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக தனது கேப்டன்ஷியில், டாஸ் வென்றார்.

    எனக்கு மட்டும் ஏன்டா இப்படியெல்லாம் நடக்கவில்லை என்று கண்டிப்பாக விராட் கோலி, பெட்டில் புரண்டு படுத்து ராத்திரியெல்லாம் யோசித்திருப்பார். அப்படி ஒரு டாஸ் ராசிக்காரராக இருக்கிறார் ரோகித்.

    பனியா பனி மலையா

    பனியா பனி மலையா

    நல்லவேளை டாஸ் வென்றதும் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். பனி பெய்கிறதா அல்லது பனி மலையில் விளையாடுகிறோமா என்று சந்தேகம் வரும் அளவுக்கு பனி மழை நீர் போல ஊற்றிக் கொண்டிருந்த ராஞ்சியில் டாஸ் வெற்றி எவ்வளவு முக்கியம் என்பது பின்னர்தான் தெரியவந்தது.

    சுழற்றி போட்ட சுழல்

    சுழற்றி போட்ட சுழல்

    முதலில் பேட் செய்த நியூசிலாந்து 11 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்து ஜம்மென்று போய்க் கொண்டிருந்தது. அஸ்வினும், அக்ஷர் பட்டேலும் நல்லவேளையாக குறுக்கே புகுந்து அந்த வேகத்தை காலி செய்தனர். எனவே எங்கேயோ போகும் என்று எதிர்பார்த்த ஸ்கோர், நான் எங்கேயும் போகவில்லை, இங்கேதான் இருக்கிறேன் என்பதை போல 153 ரன்களில் வந்து நின்றது. கண்டிப்பாக இதில் ரோகித் சர்மா கேப்டன்ஷியை போற்றி பாராட்டியாகனும்.

    கோலியிடம் பிளான் இல்லை

    கோலியிடம் பிளான் இல்லை

    ஒருவேளை கோலி கேப்டனாக இருந்தால் 11 ஓவர்களில் 90 என்றால் கடைசி 9 ஓவர்களில் குறைந்தபட்சம் அதே அளவுக்கு ரன் வந்திருக்கும். அதாவது 180 ரன்களாவது வந்திருக்கும். ஏனென்றால் கோலியிடம் எந்த பிளானும் இருந்தது இல்லை. அவர் பாட்டுக்கு விக்கெட் விழுந்தால் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வாரே தவிர, இயந்திரத்தனமாக பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதோடு, நிறுத்திக் கொள்வார். தோனி கேப்டனாக இருந்தவரை ஏதாவது வியூகங்களை மாற்றுவார், பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவது தொடங்கி ஃபீல்டிங் சேஞ்ச் வரை நிறைய விஷயங்களை செய்வார். அவ்வளவு ஏன் பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டையும் கணித்து பவுலர்களுக்கு இந்தியில் டிப்ஸ் சொல்லி அவுட்டாக்க வைப்பார். ஆனால் கோலி.. ம்ஹூம்.. விக்கெட் விழுந்தால் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து, முறைப்பாரே தவிர வேறு எதற்கும் வாய் திறக்க மாட்டார்.

    ரோகித் சர்மா கேப்டன்ஷி

    ரோகித் சர்மா கேப்டன்ஷி

    கோலி ஒரு நல்ல பேட்ஸ்மேன். ஆனால் கேப்டனாக அவர் தனித்துவமாக முத்திரை பதிக்கவில்லை. ரோகித் அப்படியில்லை. மும்பை இந்தியன்ஸ் 5 முறை, கோப்பையை வென்றுள்ளது என்றால், எத்தனை பைனல், எத்தனை செமி பைனல் பிரஷரை பார்த்திருப்பார் ரோகித். நேற்றும் அது அப்பட்டமாக தெரிந்தது. ஹர்ஷல் பட்டேல், சிறப்பாக பந்து வீசுவார் என்பது தெரிந்து, அவரையே இறுதி கட்ட ஓவர்களில் பயன்படுத்தினார். நன்கு அடி வாங்கிய புவனேஸ்வர், சஹரை அவ்வப்போது ஒவ்வொரு ஓவராக போட வைத்து எப்படியோ எஸ்கேப்பாக வைத்து விட்டார். அக்சர் பட்டேலும், அஸ்வினும், ஹர்ஷல் பட்டேலும் சிறப்பாக வீசியதால் கடைசி நேரத்தில் புவனேஸ்வர் மீதான அழுத்தங்கள் குறைந்தன. பந்து கையை விட்டு வழுக்கி ஓடும் அளவுக்கு பனி பெய்த மைதானத்தில், இந்த அளவுக்கு நியூசிலாந்தை கட்டுப்படுத்த நல்ல வியூகங்கள் உதவின. அவ்வளவு ஏன், அஸ்வினை கோலி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவரை உலக கோப்பை அணியில் இடம்பெற பரிந்துரைத்ததில் முக்கிய நபர் ரோகித் சர்மா. ஆனால் அஸ்வினுக்கு பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் ஆட வாய்ப்பு தரவில்லை கோலி. பிறகு சிறு அணிகளுக்கு எதிரான போட்டிகளின்போது களமிறக்கப்பட்டார். ஆனால், பாருங்கள், அஸ்வின் கம்பேக் கொடுத்தது முதல் விக்கெட்டுகளை எடுக்காமல் அவர் ஸ்பெல் முடிந்ததே இல்லை.

    கேப்டன் கோலி

    கேப்டன் கோலி

    சேஸிங்கிலும் ரோகித் நல்ல தொடக்கம் கொடுத்தார். கேப்டனான பிறகுதான் விராட் பேட்டிங் சொதப்ப ஆரம்பித்தது. ஸ்ட்ரைக் ரேட் குறைந்தது. பொறுப்பு வந்தால் அப்படித்தான் பல வீரர்களும் பேட்டிங்கில் கோட்டை விடுவார்கள். சச்சின் டெண்டுல்கர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று, அணி நிர்வாகத்திடம் சொல்லி சம்மதிக்க வைத்ததும் இதனால்தான். கேப்டனாக ஆடும்போது வழக்கத்தை விட சச்சின் பேட்டிங்கில் தடுமாற்றம் இருந்தது. பிறகு பழைய பார்முக்கு வந்தார். ஆனால், ரோகித் ரெக்கார்டு அப்படியில்லை. கேப்டனாக இருக்கும்போது ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக உள்ளது என்கிறது புள்ளி விவரம்.

    திரு திரு ஆட்டம்

    திரு திரு ஆட்டம்

    கேப்டன் என்னதான் சிறப்பாக செயல்பட்டாலும், இந்திய அணி ஒரு சில விஷயங்களில் மாற வேண்டியுள்ளது. மிடில் ஆர்டர், லோவர் மிடில் ஆர்டர் ஏதோ பிரண்ட் கல்யாணத்திற்கு வேறு ஊருக்கு போய் விட்டு எந்த தெரு வழியே வந்தோம் என்று தெரியாமல் திரு திருவென விழிப்பவர்களை போல முழித்துக் கொண்டிருக்கிறார்கள். வெங்கடேஷ் ஐயருக்கு நேற்று ஒன் டவுன் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. பந்தை அவர் அடிக்கவில்லை, பந்துதான் அவரை அடித்துக் கொண்டிருந்தது. அப்படி இப்படி பட்டு ரன்கள் வந்தன. மெல்ல ஆடு என்று சொல்லி அனுப்பியிருப்பார்கள் போல. ஆனால் இவ்வளவு மெல்ல ஆடியிருக்க கூடாது. வழக்கம்போல ரிஷப் பண்ட், பந்து வடக்கு தெருவில் போனால், கிழக்கு தெருவில் தேடிக் கொண்டிருந்தார்.

    நீசம் பந்து வீச்சு நாசம்

    நீசம் பந்து வீச்சு நாசம்

    நல்ல வேளையாக 19வது ஓவரை வீச ஆளில்லாமல் நீசம் வந்ததால், அடுத்தடுத்து 2 சிக்சர் அடித்து அவர் பவுலிங்கை நாசம் செய்தார் ரிஷப் பண்ட். சவுத்தியும், டிரெண்ட் பவுல்டும் வீசியிருந்தால், அதே மாதிரி பந்தை தடவிதான் விட்டிருப்பார். சூர்யகுமார் யாதவ், டிவில்லியர்ஸ் போல 360 டிகிரி பேட்ஸ்மேன். ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன். அவரது பாடிலேங்குவேஜே, எதிரணி பவுலர்களுக்கு தன்னம்பிக்கையை இழக்க வைத்து விடும். ஆனால் ரொம்ப மெத்தனமாகவும் ஆடுகிறார் என்பதை சொல்லாமல் இருக்க முடியாது. முதல் போட்டியில் அரை சதம் விளாசி நன்கு போய்க்கொண்டிருந்தபோது, டிரெண்ட் பவுல்ட் பவுலிங்கில் தேவையில்லாமல் ஸ்வீப் ஷாட் ஆடி அவுட்டாகி, கடைசி நேரத்தில் டென்ஷனை ஏற்றி விட்டார். நேற்றைய போட்டியில், 1 ரன் மட்டுமே எடுத்த அவர், சவுத்தி பந்து வீச்சை பந்துக்கு வலிக்க கூடாது என்று நினைப்பதை போல ஆப்சைடில் தட்ட நினைக்க, அது பேட்டில் பட்டு ஸ்டம்பில் அடித்து பௌல்ட் ஆனார்.

    மிடில் ஆர்டர் மோசம்

    மிடில் ஆர்டர் மோசம்

    வெங்கடேஷ் ஐயர் 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்தார். அதில் பாதி ரன்கள், அவருக்கே தெரியாமல் அவர் பேட்டில் பட்டு வந்தவை. ரிஷப் பண்ட் 6 பந்தில் 12 ரன்கள் என்று ஸ்கோர் கார்டு காட்டுகிறது. காரணம், அவர் சந்தித்த கடைசி 2 பந்தும் சிக்சராக போனது. முதல் 4 பந்தில் அவர் பூஜ்யம்தான். ஏதோ ஒரு போட்டியல்ல, 2 போட்டிகளிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவராவது அல்லது இருவராவது நிலைத்து நிற்பதால் ஈஸி வெற்றி மாதிரி தெரிகிறது. ஆனால் மிடில் ஆர்டர் படு மோசமாகதான் இருந்துள்ளது. ஓப்பனிங் சொதப்பினால் டீமே சரியும் அபாயம் நன்கு தெரிகிறது. இதை சரி செய்ய பவர் ஹிட்டர்கள் தேவை. பரிசீலிப்பாரா டிராவிட்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+