For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குட்நியூஸ்: இனி அவசரகால உதவிக்கு 112 எண் மட்டுமே- 100, 101, 102 இல்லை

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்காவுக்கு எப்படி 911 எண்ணோ அதே போன்று இந்தியாவின் தேசிய அளவில் அவசரகால எண்ணாக இனி 112 மட்டுமே இருக்கும் என்று மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

அமெரிக்காவில் அவசரகால எண் என்றாலே 911 தான். ஆனால் இந்தியாவில் போலீஸ் என்றால் 100, ஆம்புலன்ஸ் சேவைக்கு 108, தீயணைப்பு துறைக்கு 101 என்று பல அவசரகால எண்கள் உள்ளன. இதனால் மக்கள் குழம்பும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.

India adopts '112' as its all-in-one emergency number

இந்நிலையில் தான் தேசிய அளவில் அவசரகால எண்ணாக இனி 112 மட்டுமே இருக்கும் என்று மத்திய அரசு தீர்மானித்துள்ளது. ஓராண்டிற்குள் 100, 101, 102 உள்ளிட்ட எண்களை அப்புறப்படுத்திவிட்டு 112 தான் பயன்படுத்தப்படும்.

அவசரகால எண்ணாக ஒரே எண்ணை வைக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சகம் திங்கட்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. பிரச்சனையில் உள்ள நபர் 112 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் சம்பந்தப்பட்ட துறைக்கு அவருக்கு இணைப்பு வழங்கப்படும்.

இந்த 112 சேவையை செல்போன் மற்றும் தொலைபேசி மூலமாகவும் பயன்படுத்தலாம். பிரச்சனையில் உள்ளவர் உதவி கேட்டு 112 எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் அதன் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அருகில் உள்ள உதவி மையத்திற்கு தெரிவிக்கப்படும்.

112 சேவை கால் சென்டர் மூலம் செயல்படும். கால் சென்டரில் பணியாற்றுவோர் ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பேசுவார்கள்.

English summary
India has adopted 112, equivalent of the American 911, as the single emergency number.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X