ராஜஸ்தானில் இருந்து 'அமெரிக்காவுக்கு' பாஸ்போர்ட் இல்லாமல் பஸ்சில் போகலாம்: கட்டணம் ரூ.110

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: இந்தியாவில் இருந்து 'அமெரிக்காவுக்கு' பாஸ்போர்ட், விசா ஏதுமின்றி பஸ்சில் பயணிக்க முடியும் என்றால் நம்புவீர்களா? நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. ஜோத்பூரில் இருந்து ரூ.110 கட்டணத்தில் செல்ல முடியும்.

ராஜஸ்தான் வாருங்கள்

ராஜஸ்தான் வாருங்கள்

அப்படி 'அமெரிக்காவுக்கு' பஸ்சில் போக முடியும் என்று நினைப்பவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகருக்கு வாருங்கள். அங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து பாலோடி என்ற இடத்துக்கு செல்லும் பஸ்சில் ஏறுங்கள். ரூ.110 தான் கட்டணம். இரண்டு மணி நேரத்திற்கெல்லாம் நீங்கள் 'அமெரிக்காவில்' இருப்பீர்கள்.

ஏமாந்தீங்களா

ஏமாந்தீங்களா

ஆனால் அங்கு போய் நின்று கொண்டு, வெள்ளை மாளிகை எங்கே இருக்கு, நியூயார்க்குக்கு சோத்தாங்கை பக்கமா போகனுமா அப்டீன்னுல்லாம் அப்பாவித்தனமாக கேட்டுக் கொண்டிருக்க கூடாது. ஏன்னா, இது அமெரிக்க ஐக்கிய நாடுகள் கிடையாதுங்க.. ராஜஸ்தானிலுள்ள ஒரு கிராமத்தின் பெயர்தான் 'அமெரிக்கா'.

பஞ்சாயத்து தீர்மானம் பார்த்துக்கோங்க

பஞ்சாயத்து தீர்மானம் பார்த்துக்கோங்க

ஜோத்பூரில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் உண்மையான பெயர் லோர்டியான். ஆனால் சில காலத்துக்கு முன் கிராம பஞ்சாயத்துக் கூட்டத்தில் 'அமெரிக்கா' என்று பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெயரை மாற்றினால் சோறு கிடைக்காது

பெயரை மாற்றினால் சோறு கிடைக்காது

இதுபற்றி கிராமத்தாரிடம் கேட்டால், முன்னேறிய நாட்டின் பெயரை வைத்தால் நாமும் முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கையில் பெயரை மாற்றியதாக கூறுகிறார்கள். பெயரை மீண்டும் யாரும் மாற்றிவிடக்கூடாது என்பதற்காக ஒரு பொய் தகவலையும் ஊர் பெரியவர்கள் பரவவிட்டுள்ளனராம். இதுபற்றி கிராமவாசி கோவிந்த்கல்லா என்பவர் கூறுகையில், அமெரிக்கா என்ற பெயரை நீக்கிவிட்டால் ஊர் மக்களுக்கு சாப்பாடு கிடைக்காது என்ற ஒரு நம்பிக்கை இங்கு உலவுகிறது என்றார்.

சிரிக்கிறார்கள்...

சிரிக்கிறார்கள்...

ஆனால் பக்கத்து ஊர்க்காரர்களோ, இப்படி ஒரு கிராமத்துக்கு அமெரிக்கா பெயரை வைத்துள்ளார்களே என்று சொல்லி சொல்லி சிரித்து வருகிறார்கள். பஞ்சாயத்து தீர்மானம் போட்டு பெயரை மாற்றியுள்ளபோதிலும், வருவாய் துறை ஆவணங்களில் இக்கிராமத்தின் பெயர் லோர்டியான் என்றே தொடருகிறது.

அமெரிக்கா பெயரை வைத்தால் ஓகோன்னு வாழ்க்கை

அமெரிக்கா பெயரை வைத்தால் ஓகோன்னு வாழ்க்கை

ஊர் பெரியவர் ஒருவர் பெயர் மாற்றத்திற்கு மற்றொரு காரணமும் கூறுகிறார். தார் பாலைவனம் அமைந்துள்ள இடத்துக்கு அருகில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் அடிக்கடி காற்று மணலை அள்ளி இந்த ஊரில் தூவுவது வழக்கம். சமீபத்தில் ஒருமுறை மணல் மழையே பெய்ததுபோல அதிகப்படியான மணல் ஊருக்குள் வந்ததாம். இதனால் ஊரிலுள்ள வீடுகள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்துபோகும் என்ற அச்சம் கிராம மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ஊர்ப்பெயர்தான் காரணமாக இருக்கும் என்றுதான் வேறு பெயர் சூட்ட யோசித்தபோது அமெரிக்கா என்று பெயர் வைத்துவிடலாம், வளமாக வாழலாம் என்று முடிவு செய்தோம் என்றார்.

டூருக்கு ரெடியா

டூருக்கு ரெடியா

குறைந்த செலவில், அமெரிக்கா டூர் போகும்ஆசை வந்துடுச்சா. இந்த வருஷ சம்மர் லீவுக்கு குடும்பத்தோடு சுற்றுலா போக ஒரு நல்ல இடம் கிடைச்சிருக்குமே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+