தென் சீனா கடல் பஞ்சாயத்து... சீனாவுக்கு எதிராக பிலிப்பைன்சுடன் கை கோர்த்த இந்தியா!!
டெல்லி: தென் சீனா கடற்பரப்பில் அமெரிக்கா போர்க் கப்பல் நுழைந்ததால் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் சீனாவுக்கு எதிராக பிலிபைன்சுடன் இந்தியா கை கோர்த்திருக்கிறது.
தென் சீனா கடற்பரப்பு முழுவதும் தமக்கே சொந்தம் என்கிறது சீனா. அத்துடன் 2 செயற்கை தீவுகளை உருவாக்கி அங்கி விமான தளங்களையும் அமைத்துள்ளது சீனா.

ஆனால் தென் சீனா கடற்பரப்பை ஒட்டிய பிலிப்பைன்ஸ், வியட்நாம், புருனே, மலேசியா உள்ளிட்ட நாடுகள் இந்த கடற்பரப்பு தங்களுக்கும் சொந்தம் என உரிமை கொண்டாடி வருகிறது. இதில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, இந்தியா நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வியட்நாமுடன் இணைந்து தென்சீனா கடற்பரப்பில் எண்ணெய் அகழாய்வுப் பணியை இந்தியா மேற்கொண்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபை ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய அமெரிக்கா அதிபர் ஒபாமாவும் தென் சீனா கடல் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வலியுறுத்தி இருந்தார்.
இருப்பினும் தென்சீனா கடற்பரப்பு முழுவதையும் கைப்பற்றுவதில் சீனா முனைப்புடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிரடியாக தென்சீனா கடற்பரப்பில் சீனா அமைத்துள்ள செயற்கை தீவுகளுக்கு அருகே அண்மையில் அமெரிக்காவின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பிராந்தியத்தில் போர் பதற்றம் உருவானது.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் சென்றிருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தென்சீனா கடற்பரப்பு விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தினார். பிலிப்பைன்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆல்பர்ட் ஃப் டெல் ரொசாரியோவும் சுஷ்மா ஸ்வராஜூம் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், தென் சீனா கடற்பரப்பு என்பதற்கு பதிலாக மேற்கு பிலிப்பைன்ஸ் கடற்பரப்பு என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
தென்சீனா கடற்பரப்பை இப்படி மேற்கு பிலிப்பைன் கடற்பரப்பு என இந்தியா குறிப்பிடுவது இதுதான் முதல் முறையுமாகும். இந்திய பெருங்கடல் பரப்பில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களும் போர்க்கப்பல்களும் அதிகளவில் நடமாடுவதற்கான பதிலடியாக இந்தியாவின் இந்நடவடிக்கை கருதப்படுகிறது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications