சைட் எபக்ட்டை ஏற்படுத்தும் பென்சிடில், கோரக்ஸ் உள்ளிட்ட 300 மருந்துகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
டெல்லி: மத்திய அரசின் ஒப்புதல் பெறாத 300க்கும் மேற்பட்ட பக்கவிளைவுகளை உண்டாக்கும் மருந்துகள் விற்பனைக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வகையான நோய்களுக்கு ஒரே நிவாரணம் அளிக்கும் வகையில், பென்சிடில் என்ற மருந்தை அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ளது.
இது உண்மையில் இருமல் மருந்தாகும். இதில் கோடைன் என்ற மருந்துப் பொருளும் இடம் பெறுகிறது.

எல்லா வலிகளுக்கும் நிவாரணம்:
இந்த மருந்து இருமல், சளி, காய்ச்சல், மூக்கடைப்பு, வயிற்றுப் போக்கு, உடல் வலி என பல்வேறு வகையான நோய்களுக்கு ஒரே நிவாரணியாக செயல்படுகிறது. இதனால் இந்த மருந்தை உட்கொள்பவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படும் என சமீபத்தில் எச்சரிக்கப்பட்டது.

அதிரடியாக தடை:
இதையடுத்து ஒரே மருந்தில் பல்வேறு வகையான நோய்களுக்காக அளிக்கப்படும் பென்சிடில், கோரக்ஸ் போன்ற 300க்கும் மேற்பட்ட கூட்டு கலவை மருந்து விற்பனைக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடை விதித்துள்ளது.

மறு ஆய்வு செய்ய உத்தரவு:
கடந்த 2014 ஆம் ஆண்டு மாநில அரசுகளின் அனுமதியுடன் இந்திய சந்தைக்குள் நுழைந்த 6,000 கூட்டு கலவை மருந்துகளை மறு ஆய்வு செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

விரைவில் லிஸ்ட்:
அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சில மருந்துகள் தடை செய்யக்கூடியவை என தெரியவந்துள்ளது. இருந்த போதிலும் அந்த மருந்துகளின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. விரைவில் அதற்கான உத்தரவு வெளியாகும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications