காஷ்மீர் பிரச்சனை.. பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு.. இந்தியா மறுப்பு
டெல்லி: ஜம்மு-காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விடுத்த அழைப்பை இந்தியா நிராகரித்து விட்டது.
ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பேசலாம் என்று சுதந்திர தினத்தன்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது. வெளியுறவுத்துறைச் செயலாளர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் பாகிஸ்தான் அழைத்திருந்தது.

ஆனால் இந்தியா இந்த அழைப்பை நிராகரித்து விட்டது. இந்தியாவின் முடிவை, பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் கௌதம் பாம்பவாலா, பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்திற்கு முறைப்படி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியத் தரப்பில் கூறுகையில், காஷ்மீர் குறித்துப் பேச பாகிஸ்தானுக்கு எந்த அருகதையும், உரிமையும் கிடையாது. வேண்டுமானால் காஷ்மீர் பிரச்சினைக்கு முக்கிய மூல காரணமான எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து வேண்டுமென்றால் பேசலாம். காஷ்மீர் குறித்து பேச ஒன்றுமில்லை என்று இந்தியா பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது.
மேலும் காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து பாகிஸ்தான் கவலைப்படத் தேவையில்லை. காரணம் அது முற்றிலும் இந்தியாவின் உள் விவகாரம். அதில் தலையிட பாகிஸ்தானுக்கு உரிமை கிடையாது என்றும் இந்தியா காட்டமாக தெரிவித்துள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications